Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஏழு பேரின் விடுதலைக்காக களத்தில் இறங்கிய சினிமா பிரபலங்கள்! தமிழ்நாடு முழுக்க பெரும் புரட்சி

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டுப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க கோரி இந்த போராட்டம் நடந்தது.

28 வருடங்களாக சிறை கொடுமை அனுபவித்து வரும் அந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளின் தாய் நீண்ட நாட்களாக போராட்டம், பேரணிகளை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் சட்டப்பிரிவு 161 ஐ பயன்படுத்தி 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் கொடுத்துவிட்ட போதிலும் அவர் காலம் தாழ்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் நடிகர் சத்யராஜ், பொன்வண்ணன், இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.