Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமலை படப்பிடிப்பிலேயே கலாய்த்த கவுண்டமணி, செம்ம சுவாரஸ்ய தகவல்

கமல்ஹாசன் இந்திய சினிமாவின் மிகப்பெரும் உச்ச நட்சத்திரம். இவர் தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார், இந்நிலையில் கமல் நடிப்பில் வெளிவந்த சிங்காரவேலன் படத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது.

அப்படத்தில் நடந்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தொலைக்காட்சியில் கூறியுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு போது ஒருவர் கவுண்டமணியிடம் ‘அண்ணே இப்பட்த்தில் செந்தில் இல்லையா?’ என்று கேட்க, அதற்கு கவுண்டமணி ‘சிவப்பு செந்தில் கமல் இருக்காரே’ என்று கூறினாராம்.

இதை அறிந்த கமல், கவுண்டமணி மன்னிப்பு கேட்டால் தான் நான் படப்பிடிப்பிற்கே வருவேன் என்று கூறிவிட்டாராம், பிறகு இந்த செய்தி கவுண்டமணி காதுகளுக்கு வந்துள்ளது.

உடனே அடுத்தநாள் பலரும் கூடியிருந்த கூட்டத்தில் கவுண்டமணி ‘கமல் சார் உங்களை சிவப்பு செந்தில் என்று சொன்னதற்கு மன்னித்துவிடுங்கள்’ என்று கத்தினாராம்.

கமல் என்ன செய்வது என்று தெரியாமல் ‘அட விடுங்கண்ணே’ என்று சமாளித்ததாக அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.