Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜயகாந்த் மனுஷனாங்க, முன்னணி தயாரிப்பாளரே பிரமித்த விஷயம்

விஜயகாந்த் இன்று தீவிர அரசியலில் இறங்கி சினிமாவில் இருந்து முற்றிலும் ஒதுங்கிவிட்டார். ஆனால், அவர் சினிமாவில் இருந்த போது ரஜினி, கமலுக்கு கடும் போட்டியாக இருந்தவர்.

இவர் குறித்து பிரபல தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.

இதில் ‘விஜயகாந்த் எங்கள் கம்பெனியில் படம் செய்யும் போது நானே வியந்துள்ளேன்.

ஒரு முறை அவர் டெல்லியில் படப்பிடிப்பில் இருந்த போது 2 ஷிப்ட் வேலை செய்தார், கடுமையாக இரவு-பகல் பாராமல் வேலைப்பார்த்தார்.

அதை பார்த்து இவரு மனுஷனானே தெரியல, இப்படி வேலைப்பார்க்கின்றாரே, என அசந்துவிட்டோம்’ என கூறியுள்ளார்.