Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நமக்கு தேவை தல தளபதி அப்டேட் தானா, மே 22 பற்றி நமக்கு என்ன, மறந்துவிட்டோம்ல??

மனிதர்களாக இருக்கக்கூடிய அனைவருக்கும் மறதி உண்டு. ஆனால் அதனால் நாம் நாட்டில் நடக்கும் பல அநியாயமான விஷயங்களை மறந்துகொண்டே வருகிறோம்.

பிப்ரவரி மாதம் எல்லாம் புல்வாமா தாக்குதல் பற்றி பேசினோம், பின் பொள்ளாச்சி சம்பவம் பேசப்பட்டது, அடுத்தடுத்து IPL, தேர்தல் என எல்லா விஷயங்களையும் மறந்துவிட்டோம்.

அப்படி தான் மே 22 நாம் நியாயம் கேட்டு போராட வேண்டிய ஒரு விஷயத்தை மறந்துவிட்டோம், தூத்துக்குடியில் நியாயம் கேட்டு போராடிய 13 போராளிகளை இழந்தோம். அந்த நாளை நினைவூட்டும் வண்ணமாக IBC தமிழ் குழுவினர் உருவாக்கிய ஒரு வீடியோ இதோ,