Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவின் வசூலை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்ற சிவாஜி- சாதனைகளின் அரசன்

தமிழ் சினிமாவில் ரஜினியின் இடத்தை இனி ஒருவர் நிரப்ப வேண்டும் என்றால் அது கடினம் தான். ஏனெனில் இந்த ரூ 100 கோடி, ரூ 200 கோடி விளையாட்டு எல்லாம் ரஜினி சிவாஜி, எந்திரனிலேயே செய்து முடித்துவிட்டார்.

இந்நிலையில் இன்றுடன் சிவாஜி வெளிவந்து 12 வருடங்கள் ஆகின்றது, இப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸ் தாண்டி உலக அளவில் தமிழ் படத்திற்கு பெரிய மார்க்கெட் உருவாக்கி கொடுத்தது.

இந்தியாவில் மட்டுமே சிவாஜி ரூ 115 கோடி வரை வசூல் செய்தது, உலக அளவில் ரூ 150 கோடி வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியது.

இது தான் தமிழ் சினிமாவின் முதல் ரூ 100 கோடி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் வெளிவந்து தற்போது 12 வருடங்கள் ஆகிய நிலையில் இதை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.