பிரபல இயக்குனருடன் தியேட்டருக்கு சென்ற அஜித், அதுவும் விழுந்து விழுந்து சிரித்தாராம், அப்படி என்ன படம் தெரியுமா?
நிகழ்வுகள் by Tony
தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்டவர். இவர் நடிப்பில் வலிமை படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இப்படத்தை நேர்கொண்ட பார்வையை இயக்கிய வினோத் தான் இயக்கவுள்ளார், இந்நிலையில் அஜித்துடன் பல படங்களில் பணியாற்றியவர் இயக்குனர் சரண்.
இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே, இந்நிலையில் சரண் ஒரு பேட்டியில் ‘அஜித் சாருடன் பல படங்கள் பார்த்துள்ளேன்.
அந்த வகையில் சென்னையில் ஒரு முக்கியமான திரையரங்கிற்கும் அவருடன் தமிழ் படம் என்ற படத்திற்கு சென்றேன்.
அந்த படத்தில் ஒவ்வொரு காட்சியையும் அவர் ரசித்து விழுந்து விழுந்து சிரித்தார்’ என கூறியுள்ளார்.