Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்திற்கே படம் பிடிக்கவில்லை, ஆனாலும் நடித்துக்கொடுத்தார்! எந்த படம் தெரியுமா?

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் வந்தது.

இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, இதை தொடர்ந்து அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அடுத்து தொடங்கவுள்ளது, இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜி படம் குறித்து மனம் திறந்துள்ளார்.

இதில் ‘அஜித் சாருக்கு நான் ஜி படத்தின் கதையை கடைசி நாள் அதாவது படப்பிடிப்பு தொடங்குவதற்கு முந்தைய நாள் தான் சொன்னேன்.

அவர் “சார் எனக்கு படத்தின் கதை பிடிக்கவில்லை” என்றார், உடனே தயாரிப்பாளரிடம் பேசுகையில், அவர் எல்லாம் தயாராகிவிட்டது, நீங்கள் தொடங்குகள் என்றார்.

இதை அஜித் சாரிடம் சொன்ன போது, உங்களுக்கு நம்பிக்கை இருக்கா? என்றார், நானும் ஒரு மனதாக “இருக்கு சார்” என்றேன், அப்படி தொடங்கியது தான் ஜி’ என லிங்குசாமி கூறினார்.