Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் அந்த வலியிலும் சொன்ன ஒரு வார்த்தை, ராஜ்கிரண் நெகிழ்ச்சி

ராஜ்கிரண் தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர். இவரை எல்லோருக்குமே பிடிக்கும்.

விஜய், அஜித் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் நடித்துவிட்டார், இதில் கிரீடம் படத்தில் அஜித்தின் தந்தையாக நடித்திருப்பார்.

அதுக்குறித்து இவர் சமீபத்தில் பேசிய போது ‘அஜித் தம்பி எப்போதும் படப்பிடிப்பில் உட்காரவே மாட்டார், என்ன என்று நான் உற்று பார்க்கும் போது தான் தெரிந்தது அவர் முதுகு வலியால் கஷ்டப்படுகின்றார் என்று.

பிறகு நானே ஒரு நாள் “ஏன் தம்பி இவ்வளவு கஷ்டப்படுகின்றீர்கள், ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றேன்.

அதற்கு அந்த தம்பி ‘இல்லை சார், தயாரிப்பாளர் என்னை நம்பி தான் செலவு செய்து வருகின்றார், அவருக்கு நான் உண்மையாக இருக்க வேண்டும்’ என்று அவர் கூறியது என்னை பிரமிக்க வைத்தது’ என ராஜ்கிரண் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.