இந்தியன் 2 படப்பிடிப்பில் இவ்வளவு பெரிய விபத்திற்கு இவர் தான் முக்கிய காரணமாம்? வெளிவந்த அதிர்ச்சி தகவல்
நிகழ்வுகள் by Tony
இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து எல்லோரையும் மிகவும் பாதித்துள்ளது. கமல், ஷங்கர் என படக்குழுவினர்கள் அனைவரையும் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர்.
ஆனால், இவ்வளவு பெரிய விபத்திற்கும் ஷங்கரின் மேனஜேர் விமல் தான் முக்கிய காரணம் என்று சினிமா வட்டாரத்தில் பேசி வருகின்றனர், இதில் நம் காதிற்கு வந்த செய்தி உங்களுக்காக...
அதாவது படப்பிடிப்பில் Iron truss என்ற சாதனத்தை பயன்படுத்தி பிரமாண்ட லைட்ஸுகளை மேலே வைப்பார்கள்.
அதில் அலுமினியம் பயன்படுத்தப்படுமாம், ஏனெனில் அவை தான், எத்தனை உயரத்தில் இருந்தாலும், அதை எடையை குறைத்து பேலன்ஸ் செய்யும்.
ஆனால், ஷங்கரின் மேனேஜர் விமல் அதற்கு எல்லாம் நிறைய செலவு ஆகும், அது தேவையில்லை அப்படியே மேலே ஏற்றுங்கள் என்று கூறிவிட்டாராம்.
இதனால் அந்த உயரத்தில் எடை அதிகம் ஏற்ற, அது சரிந்து விழுந்துள்ளதாக கூறுகின்றனர், இப்படி பல கோடிகள் போட்டு எடுக்கும் படத்தில் இந்த விஷயத்தை கூட பார்க்கவில்லை என்றால் எப்படி என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதோடு விமல் மீது வழ்க்குப்பதிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.