Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முடிஞ்சா இவன புடி

முடிஞ்சா இவன புடி
review

முடிஞ்சா இவன புடி

2.5
Cineulagam

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமார் லிங்கா படத்தின் தோல்விக்கு பிறகு இயக்கியுள்ள படம் முடிஞ்சா இவன புடி.

தமிழ் மற்றும் கன்னடத்தில்வெளியாகியுள்ள இதில் நான்ஈ படத்தில் வில்லனாக அனைவரையும் மிரட்டிய சுதீப் இதில் இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

கதைக்களம்

ஏமாற்றுக்காரர்களின் பணத்தை திருடும் நாயகனின் கதை தான். கறுப்பு பணத்தை பதுக்கி வைக்கும் தொழிலதிபர்களின் பணத்தை நூதன முறையில் கொள்ளையடிக்கிறார். முகேஷ் திவாரியின் வீட்டில் கொள்ளையடித்ததை தொடர்ந்து பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபடும் போது அவர்களுக்கு கிடைக்கும் ஒரு டிவிடியில் சுதீப் தன் கூட்டாளிகளுடன் பணத்தை பங்கு போடும் சிசிடிவி காட்சி இருக்கிறது.

அதை பார்க்கும் கைதி ஒருவர் சொன்ன அடையாளத்தை வைத்து ரியல்எஸ்டேட் வேலை பார்க்கும் சுதீப்பை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். ஆனால் தான் அந்த திருடன் இல்லை என்றும் அது தன் அண்ணன் என்றும் கூறியதை தொடர்ந்து விடுவிக்கின்றனர்.

மீண்டும் மற்றொரு வில்லனான தொழிலதிபர் சரத் லோகிஸ்தவா வீட்டிலும் கொள்ளை நடக்கும் போது சுதிப்பை அரெஸ்ட் செய்யாமல் விடுகிறது பொலிஸ். இதனையடுத்து என்ன ஆனது. சுதீப் இரட்டையரா என்பதை தன்னுடைய பாணியில் கூறியுள்ளார் கே.எஸ்.ரவிகுமார்.

படத்தை பற்றிய அலசல்

கன்னடத்தில் சூப்பர்ஸ்டாரான சுதீப் இந்த படத்திலும் அசத்தியுள்ளார். இரு வேறு விதமான கதாபாத்திரத்திலும் நன்றாகவே பொருந்தியுள்ளார். இவருக்கு காதல் காட்சிகள் பெரியளவில் எடுபடவில்லை. வில்லனாக மக்களுக்கு பரிட்சயமான இவர் கதாநாயகனாகவும் தனது முத்திரையை பதித்துள்ளார்.

நித்யா மேனன் காதலனை திருத்தும் பெண்ணாக வருகிறார். அழகு பதுமையாக வந்து செல்கிறார்.

சதீஷ் டைமிங் காமெடியில் கைகொடுத்துள்ளார். முகேஷ் திவாரி, சரத் வில்லனாக மிரட்டியுள்ளனர். பிரகாஷ் ராஜ், நாசரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து மனதில் நிற்கின்றனர்.

கமர்ஷியல் இயக்குனரான கே.எஸ்.ரவிகுமார் தனது வழக்கமான பாணியில் இயக்கியுள்ளார். வில்லன் படத்தின் சில காட்சிகள் வந்து போவதை தவிர்த்திருக்கலாம்.

பாடல்கள் மனதை கவரவிட்டாலும் பின்னணி இசையில் அசத்தியுள்ளார் இசையமைப்பாளர் டி.இமான். சண்டை காட்சிகளை சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார் ராஜரத்தினம்.

கிளாப்ஸ்

சுதீப்பின் நடிப்பு மற்றும் கதையோடு சேர்ந்த காமெடி

பின்னணி இசை

பல்ப்ஸ்

பழைய பாணியிலான கதை, காதல் காட்சிகள், பாடல்கள் ஈர்ப்பில்லாமல் இருப்பது.

மொத்தத்தில் நேரம் இருந்தால், லாஜிக் பார்க்காம இருக்க “முடிஞ்சா இவனை பிடி”க்கலாம்.

ரேட்டிங் : 2.5/5

ஜோக்கர் விமர்சனம்