Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதே கண்கள் திரை விமர்சனம்

அதே கண்கள் திரை விமர்சனம்
review

அதே கண்கள் திரை விமர்சனம்

3
Cineulagam

Read Adhe Kangal Review in English

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் த்ரில்லர் சம்மந்தப்பட்ட கதைகள் வரும். அப்படித்தான் 1967ல் ஒட்டு மொத்த சினிமா உலகத்தையே மிரட்டிய படம் அதே கண்கள், அந்த படத்தின் தலைப்புடனே ரோகின் இயக்கத்தில், கலையரசன் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள படம் தான் அதே கண்கள், பழைய அதே கண்கள் அளவிற்கு இது இருந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு விபத்து ஏற்படுகின்றது, அதை தொடர்ந்து கண் தெரியவில்லை என்றாலும், திறம்பட சமையல் செய்து ஒரு ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார் கலையரசன்.

அவரை சிவதா தினமும் யதார்த்தமாக சந்திக்க ஒரு கட்டத்தில் காதலாக மாறுகின்றது. இதை தொடர்ந்து சிவதா குடும்பம் பெரும் பணக்கஷ்டத்தில் இருக்க, அதற்கு கலையரசன் உதவுவதாக வாக்கு கொடுக்கின்றார்.

அன்று இரவே கலையரசனுக்கு ஒரு விபத்து ஏற்பட அதை தொடர்ந்து அவருக்கு நடக்கும் கண் அறுவை சிகிச்சையால் பார்வை வருகிறது. இந்த இடைப்பட்ட நாட்களில் சிவதா மாயமாக, அவரை தேடும் பயணத்தில் கலையரசன் பல அதிர்ச்சிகரமான சம்பவங்களை சந்திக்கின்றார். யார் இந்த சிவதா? என்பதை அடுத்தடுத்த காட்சிகளில் இயக்குனர் ரோகில் ஆடியன்ஸை சீட்டின் நுனிக்கு வரவைக்கின்றார்.

படத்தை பற்றிய அலசல்

பலரும் முதலில் கலையரசனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஏனெனில் மெட்ராஸ், கபாலி என அனைத்து படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரத்திலேயே அசத்தினார். இவர் நடித்த டார்லிங் படமும் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால், இந்த படத்தில் ஆரம்பத்தில் தடுமாறினாலும் ஒரு ஹீரோவாக வெற்றி பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

படத்தின் சாயல் நிறைய தெகிடி போலவே இருப்பதால் அதே ஹீரோயினை கமிட் செய்துவிட்டார்கள் போல. ஜனனி பெரிதும் நடிக்கும் ஸ்கோப் இல்லை. ஆனால், மொத்த படத்தையும் தூக்கி செல்வது சிவதா தான்.

யார் இந்த பெண்? என்று கவனிக்க வைக்கின்றார். அதிலும் இரண்டாம் பாதியில் மெல்லிய புன்னகையில் இவர் கடந்து செல்லும் பல காட்சிகள் விசில் பறக்கின்றது.

படத்தின் முதல் பாதி கதைக்குள் செல்ல கொஞ்சம் நேரம் எடுக்கின்றது. இரண்டாம் பாதி அளவிற்கு விறுவிறு காட்சிகள் இல்லாததால் முதல் பாதி கொஞ்சம் தடுமாறுகின்றது. பாலசரவணன் காமெடி காட்சிகளும் கைக்கொடுக்கவில்லை.

ஜிப்ரான் இசையில் பாடல்களை விட பின்னணி இசை மிரட்டல். அதிலும் சிவதாவிற்கு வரும் அந்த பின்னணி பாடல் கவர்கிறது.

க்ளாப்ஸ்

படத்தின் இரண்டாம் பாதி, விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை.

சிவதாவிற்கான அழுத்தமான காட்சியமைப்புக்கள்.

பல்ப்ஸ்

கிரைம் படம் என்றாலே லாஜிக் மிக அவசியம், ஆனால், இதில் பல இடங்களில் லாஜிக் மீறல். குறிப்பாக தன்னை பத்திரிக்கையாளர் என்று கலையரசன் கூற, ஐடி கார்ட் கூட கேட்காமல் பாலசரவணன் நம்புவது எப்படி சார்?.

மொத்தத்தில் கண்டிப்பாக த்ரில்லர் படத்தை விரும்பும் ரசிகர்கள் கவனிக்கப்படவேண்டிய கண்கள் இந்த அதே கண்கள்.