Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடுகு திரை விமர்சனம்

கடுகு திரை விமர்சனம்
review

கடுகு திரை விமர்சனம்

3.25
Cineulagam

எளிமையான மனிதர்களை வைத்து சாட்டையடி போல் படைப்புகளை கொடுக்கும் ஒரு சிலர் இயக்குனர்களில் முக்கியமானவர் விஜய் மில்டன், கோலிசோடா படத்துக்கு பிறகு மீண்டும் தனது முத்திரையோடு கடுகு படைப்பின் மூலம் களமிறங்கியுள்ளார் இயக்குனர் விஜய் மில்டன். இப்படத்தை பார்த்த நொடியிலேயே சூர்யா தனது 2டி மூலம் வெளியிட்டதே நல்ல படைப்புக்கான சாட்சி.

கதை

கடுகு சிறிதானாலும் காரம் குறையாது என்பார்கள் அது குமார் ஆளை பார்த்து யாரும் எடை போட கூடாது என்பது கடுகு படத்தின் கரு. புலி வேஷம் போடும் ராஜகுமாரன் காலப்போக்கில் அந்த கலை அழிய தொடங்கியதால் வேறு வழியில்லாமல் போலீசாக வரும் இயக்குனர் வெங்கடேஷுக்கு சமைத்து தரும் வேலைக்காரனாக வருகிறார். அதே ஊரில் இளைஞர்களுக்கு பாக்ஸிங் சொல்லித்தரும் இளைஞராகவும், அரசியலில் சுயேச்சையாக வென்று அந்த ஊரில் நல்ல பெயருடன் இருப்பவர் பரத்.

ஒரு சந்தர்ப்பத்தில் தப்பு நடக்கிறது என்று தெரிந்தும் தனது சுயநலத்துக்காக பரத் உதவி செய்யமால் வேடிக்கை பார்ப்பதும், அந்த தப்பை பற்றி அறிந்த அதற்க்காக போராடும் ராஜகுமாரன், ராதிகா ப்ரஸிதா பாதிக்கப்படுவதும் என பல விளைவுகளை நோக்கி பயணிக்கிறது கடுகு திரைப்படம்.

படத்தை பற்றிய அலசல்

புலிபாண்டியாக வரும் ராஜகுமாரன் தனது உடல் வாகுக்கு ஏற்றார் போல் உதவும் மனப்பான்மை, அதிக இரக்க குணம், வெகுளித்தனம் நிறைந்த எளிமையான மனிதர்களை பிரதிபலிக்கிறார். அதுவும் ஒரு போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் உனக்கு நண்பர்கள் இல்லையே என்ற கேள்விக்கு இருக்காங்களே 350 நண்பர்கள் பேஸ்புக்கில் இருக்கிறார்கள் என்று வெகுளித்தனமாக சொல்வதும், தன் கண் முன்னே எதாவது பிரச்சனை என்றால் உதவுவதும், அதே சமயம் உதவி செய்யமுடியவில்லையே என்று பரிதவிப்பதிலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக கிளைமாக்ஸில் பரத்துடன் அவர் போடும் சண்டை காட்சி, அதன் பிறகு அவர் பேசும் வசனங்களும் மிகப்பெரிய கைதட்டல்களை அள்ளுவது உறுதி. நல்லவனுக்குள்ளும் சுயநலத்துக்காக ஒரு கெட்ட குணம் ஒளிந்திருக்கும் என்பது தான் பரத்தின் பாத்திர வடிவமைப்பு. கண்டிப்பாக பரத்துக்கு இந்த படம் பெயர் சொல்லும் படமாக இருக்கும்.

டீச்சராக வரும் ராதிகா ப்ரஸிதா வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக சில சந்தர்ப்பத்தால் செய்யாத குற்றத்தால் தப்பானவள் என்ற பெயருடன் வாழும் கதாபாத்திரம். உண்மையில் கிளைமாக்ஸ்க்கு முன்பு வரும் திருப்புமுனையான காட்சிக்கு இவரின் கதாபாத்திரம் உதவியுள்ளது.

குறிப்பாக ராஜகுமாரனுக்கு நண்பராக வரும் அனிருத் ராஜகுமாரனுடன் சேர்ந்து செய்யும் பேஸ்புக் கலாட்டாக்கள் யதார்த்தமான சிரிப்பலைகள். அதுமட்டுமில்லாமல் பொலிஸாக நடித்துள்ள வெங்கடேஷ், பரத்துக்கு பாட்டியாக வருபவர், பாதிக்கப்படும் சிறுமி போன்ற இதர கதாபாத்திரங்களும் இப்படத்துக்கு முக்கிய தூண்களாக தான் வருகின்றனர்.

க்ளாப்ஸ்

1 படத்தின் கிளைமாக்ஸ், கோலிசோடா போல் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வசனங்களும் பேசப்படும்.

2. இப்படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் குறிப்பாக ராஜ்குமாரனின் கதாபாத்திரம், ஜோக்கராக இருக்கும் ஒருத்தன் எப்படி ஹீரோவாகிறான் என்பதை காட்டிய விதம் பிரமாதம்.

3. முதல் பாதியில் படத்தை ஒப்பிடும் சில நகைச்சுவை காட்சிகள், எந்தவொரு அலட்டலும் இல்லாத ஒரு திரைக்கதை, நம் உணர்வோடு ஒத்துக்கொள்ளும் சில வசனங்கள்

பல்ப்ஸ்

1. படத்தின் பின்னணி இசை, பாடல்கள் சொல்லும் படியில்லை.

2. இரண்டாம் பாதி தொடங்கி 20 நிமிடங்கள் எங்கு செல்கிறது என்று புரியாமல் ஜவ்வு போல் இருக்கும் திரைக்கதை.

ராஜகுமாரன் நடித்த கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்க ஆசைப்பட்டாராம், அதற்கு கதை தான் ஒரு நடிகனை தேட வேண்டும். யதார்த்தத்தை மீறிய ஒரு நடிகனை என்னால் போட முடியாது என்ற விஜய்மில்டனுக்கு ஒரு சபாஷ்.

மொத்தத்தில் கடுகின் காரம் சுவைக்கும் அளவுக்கு உள்ளது.