Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சங்கிலி புங்கிலி கதவ தொற திரை விமர்சனம்

சங்கிலி புங்கிலி கதவ தொற திரை விமர்சனம்
review

சங்கிலி புங்கிலி கதவ தொற திரை விமர்சனம்

3
Cineulagam

Read Sangili Bungili Kadhava Thorae Review in English

தமிழ் சினிமாவை பிடித்த பேய் தற்போது தான் சில காலம் விட்டு இருந்தது. ஆனால், நீண்ட நாள் ப்ரேக்கிற்காக காத்திருக்கும் ஜீவாவிற்கும் பேய் துணை தேவைப்பட்டுள்ளது போல. சூரி, தம்பி ராமையா, ஸ்ரீதிவ்யா, ராதிகா என பல நட்சத்திர கூட்டணியுடன் களம் இறங்கியுள்ளார், ஜீவாவிற்கு ப்ரேக் கிடைத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

ஜீவா அவரின் அம்மா சொந்த வீடு இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். தன் மாமாவின் வீட்டில் தான் ஜீவா பல வருடமாக இருக்கின்றார்.

ஊருக்கு வெளியே இருக்கும் பங்களாவை வாங்க வேண்டும் என்று ஜீவா விரும்ப, ஒரு சில தடைகளை தாண்டி அந்த வீடு ஜீவா கைக்கு வருகிறது.

ஆனால், அந்த வீடு எங்களுக்கு சொந்தம் என தம்பி ராமையா பேமிலியும் வர, அதை தொடர்ந்து சில அமானுஷிய நிகழ்வுகள் வீட்டில் நடக்கின்றது.

பிறகு, அந்த வீடு யாருக்கு கிடைத்தது, அந்த வீட்டில் இருக்கும் அமானுஷியம் என்ன என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஜீவா சில நாட்களாகவே தனக்கு என்ன வரும், ரசிகர்களுக்கு தன்னிடம் என்ன பிடிக்கும் என்பதையே மறந்து சுற்றி வந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் தன் ரூட்டிற்கு வந்துவிட்டார். இதுவரை சந்தானத்துடன் கூட்டணி அமைத்த இவர் தற்போது சூரியுடன் களத்தில் இறங்கியுள்ளார்.

சூரியும் அதகளம் செய்துள்ளார், ஜீவாவின் மாமா பெண்ணையே காதலிக்கும் கதாபாத்திரம். பேய் இருக்கும் பங்களாவில் இவர் செய்யும் அட்டகாசம், அதிலும் குறிப்பாக சிறுவனாக வரும் பேயுடன் இவர் விளையாடும் காட்சி எல்லாம் சிரிப்பிற்கு கேரண்டி. ஸ்ரீதிவ்யா இதுவரை தான் நடித்த படங்களில் என்ன செய்தாரோ, அதே தான் இதிலும், நடிக்க பெரிய ஸ்கோப் இல்லை.

தம்பி ராமையா, தேவதர்ஷினி, மதுமிதா, ராதிகா, ராதா ரவி என்று எப்போதுமே ஒரு ப்ரேமிற்குள் குறைந்தது 4 பேராவது இருந்து வருகின்றனர். படத்தின் முதல் பாதி செம்ம கலகலப்பாக செல்ல, இரண்டாம் பாதி கொஞ்சம் தடுமாறுகின்றது.

ஆனால், மொத்தத்திற்கும் சேர்த்து கிளைமேக்ஸில் செய்கிறார்கள் ஒரு கலாட்டா. தொடர்ந்து 20 நிமிடத்திற்கு மேல் சிரிப்பு சரவெடி தான், பட்ஜெட் பத்மநாதன் படத்தையும் தில்லுக்கு துட்டு படத்தையும் சேர்த்து மிக்ஸியில் அடித்தால் சங்கிலி புங்கிலி கதவ தொற.

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு பாதி நேரம் இருட்டில் இருந்தாலும் தெளிவாக காட்சிகளை படம்பிடித்து காட்டுகின்றது. விஷால் சந்திரசேகர் பாடல்கள் வரும் போதெல்லாம் தியேட்டர் கேண்டின் புல் ஆகும், அதே நேரம் பின்னணியில் கலக்கியுள்ளார்.

க்ளாப்ஸ்

படத்தின் முதல் பாதி மற்றும் கிளைமேக்ஸ் அரை மணி நேரம். ஜீவா-சூரி காம்பினேஷன் கலக்கியுள்ளது.

பேய் படங்கள் தொடர்ந்து வந்தாலும், குடும்பம் எத்தனை தேவை என்பதை கொஞ்சம் காமெடி கலந்து திகிலுடன் கூறியவிதம். சூப்பர் Ike (இயக்குனர்)

படத்தின் பின்னணி இசை.

பல்ப்ஸ்

ப்ளாஷ்பேக் காட்சிகள் பெரிதும் அழுத்தமாக இல்லாதது, கௌசல்யா போல் நல்ல நடிகையை சரியாக பயன்படுத்தவில்லை.

படத்தின் பாடல்கள்.

மொத்தத்தில் 2.30 மணி நேரம் சந்தோஷமாக இருக்க கண்டிப்பாக இந்த கதவை திறக்கலாம்.