Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொதுவாக எம்மனசு தங்கம் - திரை விமர்சனம்

பொதுவாக எம்மனசு தங்கம் - திரை விமர்சனம்
review

பொதுவாக எம்மனசு தங்கம் - திரை விமர்சனம்

2.25
Cineulagam

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என பல கலைஞர்கள் தடைகளை தாண்டி சாதித்து வருகின்றனர். அதில் ஒருவராக நீண்ட நாட்களாக சாதிக்க போராடும் உதய நிதியின் பொதுவாக எம்மனசு தங்கம் வெளிவந்துள்ளது.

தங்கம் மின்னினாலும் உரைகல்லில் உரசிப்பார்த்தால் தான் உள்ளே என்ன இருக்கிறது என தெரியும். சரி, இந்த தங்கம், தங்கம் தானா என உரசிப்பார்ப்போம்.

கதைக்களம்

அழகான கிராமம், நல்ல சுற்று வட்டாரம். இந்த கூட்டத்தில் ஒருவர் தான் கணேஷ் என்னும் உதயநிதி. இவருக்கு நெருங்கிய நண்பனாக சூரி. இவர் தான் டைகர் பாண்டி. இருவரும் சேர்ந்து ஒன்றாய் சுற்றி ஊர் விசயங்களில் மூக்கை நுழைத்து எதிர்ப்பை சம்பாதிக்கிறார்கள்.

எப்படியோ போராடி நினைத்ததை அடைந்து விடுகிறார்கள். இதில் ஊர் பெரியவர் தான் ஊத்துக்காட்டான். அவர் வேறு யாருமல்ல நம்ம் பார்த்திபன் தான்.

நல்லது செய்வது போல கெட்டதை செய்யும் இவருக்கு இருக்கும் ஒரு சவால் தான் உதயநிதி. தங்கையை கட்டிக்கொடுத்த ஊருக்கு மட்டுமே பல நன்மைகளை செய்யும் பார்த்திபனின் மீது ஆத்திரம் அடைகிறார்கள்.

பார்த்திபனின் மகளாக வரும் நிவேதா பெத்துராஜை பிளான் போட்டு காதலிக்கிறார். பார்த்திபன் என்ன முடிவெடுத்தார், பார்த்திபன் ஊர் மக்களுக்கு கெட்டது செய்வதன் பின்ணனி என்ன, உதயநிதியின் பிளான் ஒர்க்கவுட் ஆனதா, காதலர்கள் இருவரும் சேர்ந்தார்களா என்பது தான் கதை.

படத்தை பற்றிய அலசல்

உதயநிதி பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். காமெடி, ஆக்‌ஷன் என அடுத்தடுத்து முன் செல்கிறார். ஆனாலும் இப்படத்தில் வழக்கம் போல பழைய ட்ரண்டில் இருப்பது போலவே தோன்றுகிறது. வேறு ட்ராக்கை பிடிக்கலாமே.

நிவேதா பெத்துராஜ் அத்தனை அழகாக காண்பிக்கப்பட்டுள்ளார். தன் இயல்பான நடிப்பாலும் ஸ்கோர் அள்ளுகிறார். அப்பாவை பற்றி வெளியே சொல்ல முடியாமல் ஒரு மகளாக தவிக்கும் விதம் தனி ரகம்.

சூரியை பற்றி சொல்லவா வேண்டும். டைகர் பாண்டி என பேர் வைக்கப்பட்டதும் போதும், புகுந்து விளையாடுகிறார். எதிர்பார்ப்பு குறையவில்லை.

பார்த்திபனுக்கு உரிய இயல்பான நடிப்பு இப்படத்திலும் வெளிப்படுகிறது. எப்போதும் போல குறும்பான பேச்சு, நக்கலான வசனங்கள் என கொடுத்திருந்தாலும், இவர் எப்போது நல்லவனாக மாறுவார் என அடுத்தடுத்து நம்மை கேள்வி கேட்க வைக்கிறது.

இடையில் மயில் சாமி வேறு. துணை நடிகர்கள் பலர் இருந்தாலும் மயில் ஒரு தனியாளாய் தென்படுகிறார்.

க்ளாப்ஸ்

சூரி, உதயநிதி கைகோர்ப்பு ஓகே. குலசாமி கோவில் கும்பிடப்போன மகிழ்ச்சி.

சூரியின் சேட்டை. நடிப்பு, கலாய்ப்பு படத்திற்கு பக்க பலம்.

நிவேதா பெத்துராஜ் தனியாக தெரிகிறார். நடிப்பில் புது ஜாலம்.

பார்த்திபனின் நடிப்பு ஓகே.

பல்ப்ஸ்

இயக்குனரின் இந்த கதை ஏற்கனவே பார்த்த காம்பினேஷன் போல தெரிகிறது.

இசையமைப்பாளர் இமானுக்கு சரியான இடம் கொடுக்கப்படவில்லை என பாடல்கள் காட்டுகிறது.

பேசிப்போன விசயங்கள் மீண்டும் மீண்டும் வருவது சற்று கூசச்செய்கிறது.

மொத்தத்தில் தங்கம் ஓகே தான். இன்னும் தரத்தை கூட்டி மெருகு ஏற்றியிருக்கலாம்.