Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தப்பு தண்டா திரை விமர்சனம்

தப்பு தண்டா திரை விமர்சனம்
review

தப்பு தண்டா திரை விமர்சனம்

2.25
Cineulagam

சினிமாவில் இப்போதிருக்கும் சூழ்நிலையில் படம் வெளிவருவது என்பதே பெரிய விசயமே. தேதி கிடைத்தாலும் போட்டியிருக்குமா எனும் கேள்வியும் இருக்கும். இதிலும் சில தவறுகள் நடந்தேறும். பெரிதளவில் போட்டியில்லை எனினும் படத்தின் வெற்றி, கதை மற்றும் வழங்கக்கூடிய விதத்தில் தான் இருக்கிறது.

கதைக்களம்

படத்தின் ஆரம்பமே கொலையில் தான். ஊரில் முன்னாள் எம்.எல்.ஏவாக மைம் கோபி நடித்திருக்கிறார். இவரிடம் வேலை செய்யும் டிரைவர் காளியாவின் நண்பனாக வருகிறார் ஹீரோ.

ஜான் விஜய் தனக்கென ஒரு கேங்கை வைத்துகொண்டு தன் சீடர்கள் மூலம் சம்பாதித்து வருகிறார். வேலைக்காக இந்த கும்பலோடு கூட்டு சேர்கிறார் ஹீரோ சத்யமூர்த்தி.

வழக்கம் போல திருட்டில் இறங்க ஊடகப்பெண்ணிடம் மாட்டுகிறார் ஹீரோ. இந்நிலையில் கோபி தேர்தலுக்காக தான் நிற்கும் தொகுதிக்கு பணம் பட்டுவாடா செய்ய தன் ஆட்களிடம் கொடுத்தனுப்பகிறார். இன்னொரு பக்கம் காளியாவை தன் வசமாக்கிய ஜான் விஜய் இப்பணத்தை கொள்ளையடிக்க இறங்கிவிடுகிறார்.

எதிர்பாராத விதமாக பணம் போலிசில் மாட்டிக்கொள்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் நேரத்தில் போலிசிடமிருந்து பணத்தை அடித்து, கூட்டணிக்கும் அதிர்ச்சி கொடுத்து எஸ்கேப் ஆகிறார் ஹீரோ. பாதி பணத்தை மறைத்து மீதி பணத்தை கணக்கில் காட்டி பேட்டிகொடுக்கிறார் போலிஸ் அதிகாரி அஜய் கோஷ்.

போலிஸிடம் ஒரு கட்டத்தில் ஹீரோ மாட்ட, இவன் அப்பாவி. மருத்துவமனையில் குற்றவாளியின் முகம் போல பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டான் என வாக்குமூலம் வர, பிடிபட்டவன் அவன் அல்ல வேறொருவன் என கதை திசை மாறுகிறது.

ஹீரோவின் நோக்கம் என்ன, போலிஸின் சதி என்ன, பணம் கிடைத்தா, ஹீரோ தப்பித்தாரா, முகம் மாற்றப்பட்ட நபர் யார், அவர் ஏன் முகமாற்றம் செய்ய வேண்டும் என்பதே மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

ஹீரோ சத்ய மூர்த்தி இப்படத்திற்கு ஏற்றவாரு நடித்திருக்கிறார். புதுமுகம் என்றாலும் இன்னும் பயிற்சி தேவை. ஹீரோயின் போல ஒருவரை காட்டினாலும் ரொமான்ஸ், டூயட் என எதுவுமில்லை.

தன்னிடம் திருட வந்த ஹீரோவுக்கு ஹெல்ப் பண்ணுவது எப்படி ஒத்துப்போனது என தெரியவில்லை. மைம் கோபி தன்னுடைய ரோலை சரியாக செய்திருக்கிறார். இவருக்கான லெவல் இதுவல்ல. இவரை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.

அஜய் கோஷ் வழக்கமான அதிரடி போலிஸாக இறங்கியிருக்கிறார். ஆனால் அடாவடி போலிஸ் போல தெரிகிறது. இவருக்கும் இன்னும் டாஸ்க் கொடுத்திருக்கலாம்.

ஜான் விஜய்யை வில்லன் போல காண்பித்துவிட்டு காமெடி மேன் போல காட்டிவிட்டார்கள். ஆனால் இவர் இருப்பதால் தான் ஆங்காங்கே கதை நகர்கிறது.

கிளாப்ஸ்

ஜான் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் தான் எண்டர்டெயின்மண்ட். இவரால் கதைக்கு சின்ன சின்ன கிரிஷ்ப்.

முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி சற்று எதிர்பார்ப்பை தூண்டுகிறது. படம் பார்க்கும் ஆவல் வருகிறது.

பல்பஸ்

சில இடங்களில் லாஜிக் மீறல்கள் . எடுத்த விசயத்தை முழுமையாக கொடுத்துவிட்டார்களா என்ற கேள்வியும்.

எதிர்பார்த்த விசயங்கள் இல்லையோ என ஒரு ஃபீல். கதைக்கோர்வுகளை இன்னும் கூர்மையாக்கியிருக்கலாம். விசயத்தை தெளிவாக்கியிருக்கலாம்.

நல்ல விசயத்திற்காக ஹீரோ இப்படி செய்வது போல இருந்தாலும், கடைசியில் ரசிகர்களை குழப்பிவிட்டார்களோ என நினைக்க வைக்கிறது.

மொத்தத்தில் தப்பு தண்டா ஓகே. பார்க்கலாம். கொஞ்சம் சிரிக்கலாம்.