Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வல்லதேசம் திரை விமர்சனம்

வல்லதேசம் திரை விமர்சனம்
review

வல்லதேசம் திரை விமர்சனம்

2.75
Cineulagam

ஆக்ஷன் கதைகளில் பல படங்கள் தமிழ் சினிமாவில் வருகிறது. பெண்களை மையப்படுத்திய படங்களும் சில வந்துள்ளன. கமர்ஷியல் படங்களுக்கு நடுவில் ஒரு சில சின்ன பட்ஜெட் படம் போல வந்திருக்கிறது இந்த வல்லதேசம். இந்த தேசம் எப்படியான தேசம், என்ன சொல்கிறது என பார்க்கலாம்.

கதைக்களம்

வித்தியாசமான பெண்ணான அனுஹாசன், கணவர், தன் குழந்தை அஞ்சலி என சந்தோஷமாய் வாழ்ந்து வருகிறார். மேஜர் ஆதிலிங்கமாக வரும் நாசரின் தலைமையின் கீழ் ராணுவத்தில் நன்கு பயிற்சி பெறுகிறார். தமிழ்நாட்டில் ஏதோ பெரிய சதி நடக்கிறது என்பதை தெரிந்து கொண்ட போலிசார் ராணுவத்தின் உதவியை நாடுகின்றனர்.

அப்போது படை வீரர்களுடன் அனுபப்படும் அனு டாஸ்கை வெற்றி கரமாக முடிக்கிறார். ஆனால் எதிர்பாராத விளைவால் இவருக்கு கிடைக்கும் பரிசு சஸ்பெண்ட் ஆர்டர். பின் தன் கணவர், மகளுடன் லண்டன் செல்கிறார். அங்கு செல்லும் இவரின் வாழ்நாள் பெரும் சவாலாகி விடுகிறது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த வில்லன் டேவிட் லண்டனில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் வியாபாரம் மூலம் ஆதிக்கம் செலுத்துகிறார். இவர் யார், எதற்காக இப்படி செய்கிறார், இவரின் பின் புலன் என்ன என்பது டுவிஸ்ட்.

தீடீரென மர்ம கும்பல் ஒன்று அனுஹாசனை நோட்டம் விட்டு, அவரின் கணவரை கொலை செய்துவிடுகிறது. இவரையும் துப்பாக்கியால் சுட, மகள் அஞ்சலி காணாமல் போகிறாள். போலிஸாரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனு மீண்டு எழுந்து மகளை காணாது தவிக்கிறார். ரகசியமாக இருந்து வரும் அவர் விஸ்வரூபம் எடுக்கிறார்.

இவ்விஷயம் இந்தியா, லண்டன் என பெரும் பரபரப்பை ஏற்படுத்த கதை சூடுபிடிக்கிறது. அஞ்சலி என்ன ஆனாள், யார் அந்த மர்ம கும்பல், அனுவின் திட்டம் நிறைவேறியதா என்பது தான் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

அனுஹாசன் கதையின் ஹீரோ, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழுமையான ரோலில், அதிலும் ஆக்ஷனில் தைரியமாக இறங்கியுள்ளார். குடும்பம் என்று வந்த போது மென்மையான மனதும், ஆர்மி என வந்தால் தில்லு என இரட்டை ரோல் போல ஸ்கிரீன் பிளே செய்திருக்கிறார்.

என்ன இன்னும் கொஞ்சம் இளமை கூடியிருந்தால் அவருக்கும், ரோலுக்கும் இன்னும் அழகாக இருந்திருக்குமோ என தோன்றும். நாசர் வழக்கம் போல என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பேன் என நிரூபித்துள்ளார். அவருக்கு என்னவோ எல்லா கெட்டப்பும் பொருந்தி விடுகிறது.

இப்படத்தில் சிறு ரோல் என்றாலும் கடைசி வரை இவரின் அழுத்தம் கதையில் இருக்கிறது. இயக்குனர் நந்தா கதையின் நீளத்தை இன்னும் சுருக்கியிருக்கலாம் என சின்னதாக ஒரு ஃபீல். கதையில் கொஞ்சம் கூடுதலாகவே டுவிஸ்ட். ஆனால் முதல் பாதியில் வில்லனின் பின்னணி என்ன என்பதை யூகித்து விடலாம்.

ஆனால் சஸ்பென்ஸ் வைத்து படத்தை நிரப்பிவிட்டார்கள். முதலில் சில நிமிடங்கள் வேகமான காட்சி நகர்வுகள் இருப்பதால் இயற்கையாகவே இப்படி அமைத்திருக்கிறார்களா இல்லை கதையின் நீளத்தை சுருக்குவதற்காகவா என சற்று யோசிக்க வைக்கிறது.

டேட்டா பேஸ் மேனேஜ்மண்ட், சாட்டிலைட் கம்யூனிகேஷன் என பல கான்செப்டை டச் செய்து இப்போதைய டெக்னாலஜிக்கு படத்தை பொருத்தியிருக்கிறார்கள்.

கிளாப்ஸ்

அனுஹாசனின் நடிப்பை பாராட்டலாம். அவர் வசனங்கள் டெலிவரி, இயல்பாக நடித்திருப்பது ஒகே.

அஞ்சலி பாப்பாவின் நடிப்பு ஓகே. கன்னத்தில் முத்தமிட்டால் கீர்த்தனாவின் ஃபிளாஷ் வந்துபோகும்.

படத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு பாடல். போதுமான பின்னணி இசை.

பல்ப்ஸ்

வழக்கமாக இருக்கும் விஷயங்களில் ஒன்றாக ட்விஸ்ட், ட்விஸ்ட் என ஒரு சில இடங்களில் குழப்பமடைய செய்வதுதான்.

அம்பானி போன்ற தோற்றத்தில் இருப்பவரை உடனே வில்லனாக பார்க்க சிறு தயக்கம்.

இயக்குனர் இன்னும் வேகப்படுத்தியிருந்தால் கதை ரியல் ஆக்‌ஷன் ஃபிலிம் போல மாறியிருக்கும்.

மொத்தத்தில் பெண்ணிற்கு வீட்டில் மட்டுமல்ல, ஆணுக்கும் நிகராக நாட்டிலும் பொறுப்பு இருக்கிறது என சொல்லும் வல்லதேசம். பெண்ணியம் பேசும் தேசம்.