Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சோலோ திரை விமர்சனம்

சோலோ திரை விமர்சனம்
review

சோலோ திரை விமர்சனம்

3
Cineulagam

துல்கர் சல்மான் என்ன தான் மலையாள நடிகராக இருந்தாலும் அவருக்காக பெரும் ரசிகர்கள் கூட்டம் தமிழிலும் உள்ளது, அதற்கு மிகச்சிறந்த உதாரணம் இவர் நடிப்பில் கடைசியாக வந்த ஓகே கண்மணி ஹிட் தான், குரு இயக்கத்தில் நடித்த துல்கர் தற்போது மணிரத்னத்தில் சிஷ்யன் பீஜாய் நம்பியார் இயக்கத்தில் நடித்து வெளிவந்துள்ள படம் தான் சோலோ, துல்கர் வெற்றியை இதிலும் தக்க வைத்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

படத்தில் மொத்தம் 4 கதைகள், அந்த நான்கு கதைக்களுக்கும் எந்த ஒரு இடத்திலும் சம்மந்தமில்லை, ஆனால், அந்த 4 கதைகளிலும் துல்கரை வைத்து தான் கதை நகர்கின்றது.

சோலோ என்பதன் தலைப்பு படத்தை பார்த்தால் புரிந்துவிடும், துல்கர் பயணிக்கும் 4 கதைகளிலும் ஏதாவது ஒரு இழப்பு ஏற்படும், அதை தொடர்ந்து தனிமராவதே சோலோ தலைப்பிற்கு காரணம்.

இதை கதையாக எந்த இடத்திலும் கூற முடியாது என்பதால், அந்த 4 எபிசோட்களை பற்றி பார்ப்போம்...

படத்தை பற்றிய அலசல்

படத்தின் முதல் எபிசோட் துல்கர் கல்லூரி மாணவனாக இருக்க, ஒரு கண் தெரியாத பெண்ணை(தன்ஷிகா) காதலிக்கின்றார், இரு வீட்டார் சம்மதம் தெரிவிக்க வில்லை என்றாலும் இருவரும் திருமணம் செய்துக்கொள்கின்றனர், அதை தொடர்ந்து ஏற்படும் இழப்பு என்ன என்பதே முதல் எபிசோட்.

இரண்டாவது எபிசோட் பழிவாங்கல் என்ற புள்ளியில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது, தன் மனைவியின் இழப்பிற்கு பழிவாங்கும் ஒரு நாயகனாக துல்கர். இழப்பிலிருந்து தான் இந்த கதையே தொடங்குகின்றது. மூன்றாவது கதை அப்பா-அம்மா பிரச்சனைகளால் மகன்களின் நிலை என்ன ஆகின்றது என்பதை காட்டுகின்றது.

4-வது எபிசோட் நேகா ஷர்மாவுடன் இளமை துள்ளும் ஒரு காதலுடன் துல்கர் அறிமுகமாக அதன் பிறகு ஒரு பிரிவு, அந்த பிரிவு ஏன் என்பதன் காரணம் அதிர்ச்சியுடன் கலந்து சிரிப்பை வரவைக்கும். இப்படி 4 கதைகளும் ஏதோ ஒரு விதத்தில் தோல்வியுடனே முடிகின்றது.

பீஜாய் மணிரத்னத்தின் உதவி இயக்குனர் என்பது இந்த படத்தை பார்க்கும் போது இன்னும் அதிகமாக மனதில் பதிகின்றது, பஞ்ச பூதங்களின் வாயிலாக தான் கதையை சொல்ல முயற்சித்துள்ளார், ஆனால், நீளம் கருதி ஆகாயம் சார்ந்த கதையை மட்டும் எடுக்கவில்லை போல.

மற்றப்படி நீர், காற்று, நெருப்பு, நிலம் என வரிசைப்படி கதைகளை எடுத்துள்ளார், இதில் நெருப்புக்கான கதை தான் சூடுப்பிடிக்கும் என்று பார்த்தால் அங்கு தான் கொஞ்சம் டல் அடிக்கின்றது, மற்ற 3 கதைகளிலும் ஏதாவது ஒரு வகையில் விறுவிறுப்பு இருந்துக்கொண்டே இருக்கின்றது.

படத்தின் குறியீடாக 4 கதைகளிலும் கர்ப்பம் என்பது ஏதோ ஒரு வகையில் பயணித்து வருகின்றது, முதல் இரண்டு கதையில் நாயகிகள் வைத்து நகர்த்த, அடுத்த இரண்டு கதையில் துல்கரின் பெற்றோர்கள் செய்யும் தவறுகள் வைத்து காட்டப்படும் விதம் என பல குறியீடுகளை நாம் தான் தேடி கண்டுப்பிடிக்க வேண்டும் போல.

க்ளாப்ஸ்

தன்ஷிகா, நேகா ஷர்மா எபிசோட் எளிதில் ஈர்த்து விடுகின்றது, அதனால் என்னமோ அதை முதலும் கடைசியாக இயக்குனர் வைத்துள்ளார்.

இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என டெக்னிக்கல் விஷயங்கள் படத்திற்கு மிகப்பெரும் பலம். குறிப்பாக பின்னணி இசை.

4 கதைகளை எடுத்துக்கொண்டு அதற்கு இதை முடிச்சுப்போடுகின்றேன் என எதையும் சம்மந்தப்படுத்தாமல் கொண்டு சென்ற புதுமை ரசிக்க வைக்கின்றது.

பல்ப்ஸ்

3-வது வரும் கேங்ஸ்டர் கதை ஏதோ ஒரு விதத்தில் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை, இவை மிகவும் பொறுமையாக செல்வதால் 4-வது கதை நன்றாக இருந்தாலும் அது ஆரம்பிக்கும் போது இன்னொன்னு இருக்கா? என்று நினைக்க தோன்றுகின்றது.

ரெகுலர் சினிமா ரசிகர்கள் பொறுமையை சோதிக்க செய்கின்றது.

மொத்தத்தில் சோலோ கண்டிப்பாக ஒரு மாற்றத்திற்கான சினிமா தான், வித்தியாச முயற்சிகளை விரும்புவோர்களுக்கு விருந்து தான்.