Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விழித்திரு திரைவிமர்சனம்

விழித்திரு திரைவிமர்சனம்
review

விழித்திரு திரைவிமர்சனம்

3
Cineulagam

படங்கள் வெளிவருவது கூட அதை எடுப்பவர்களுக்கு பிரசவ வலி போலத்தான். சில வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படம் விழித்திரு. சினிமா போராட்டங்கள், பொருளாதார சிக்கல்கள் என விழி திறக்காமல் இருந்தோடு சில தடைகளை தாண்டி இந்த அடைமழை காலத்தில் விழித்திருக்கிறது இப்படம். விழித்திரு என்ன சொல்கிறது, விழிகளை மூடாமல் வைக்குமா என பார்க்கலாம். வாருங்கள் கதைக்குள் செல்வோம்.

கதைக்களம்

ஒரு படம். நான்கு கதைகள். இதுதான் இதன் மையக்கரு. கிருஷ்ணா தன் தங்கைக்காக ஒரு செல்போனை வாங்க போகும் போது தன் பர்ஸை தவறவிடுகிறார். என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிய நேரத்தில் அவருக்கு ஒரு கார் ட்ரைவ் வருகிறது.

இதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு ஊருக்கு சென்று தன் தங்கையை பார்க்கலாம் என கனவோடு இருக்கும் நேரத்தில் எஸ்.பி.பி சரணின் கொலை பழி இவர் மீது விழ வழக்கம் போல போலிஸ் வலைவீசி, விரட்டிப்பிடிக்க பார்க்கிறார்கள்.

தன் நாய்க்குட்டியை தொலைத்துவிட்டு சின்ன பொன்னு சாரா மன நிம்மதியில்லாமல் அலைந்து தேடுகிறாள். அவள் அறிவுக்கு எட்டியதை செய்து தேடிப்பிடிக்க முயற்சிக்கும் போது அவள் கடத்தல் கும்பலிடம் சிக்கிவிடுகிறாள்.

தன் மகளை காணாமல் வெங்கட் பிரபு துடிக்கிறார். ஒரு பக்கம் காதலுக்காக தன் செல்வாக்கை விட்டுவிட்டு கம்பெனி ஓனர் என சுற்றும் ஒருவர் நடிகை எரிக்கா ஃபெர்னான்டஸ் பின்னால் சுற்றுகிறார்.

தன்ஷிகா தன் கைவரிசையை காட்ட செல்லும் நேரத்தில் எப்படியோ தம்பி ராமையாவுக்கு மனைவியாகிவிடுகிறார். தப்பிக்க முயலும் நேரத்தில் விதார்த் வர இருவரும் வேறு பிளான் போடுகிறார்கள்.

மொத்தத்தில் இவர்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் ஒன்றாக சிக்க, அனைவருக்கும் பெரும் ஆபத்து காத்திருக்கிறது. இவர்கள் அனைவரும் தப்பித்தார்களா, அப்படியென்ன இவர்களுக்குள் இண்ட்டர் லிங்க், சரண் ஏன் கொல்லப்பட்டார் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தான் முழுக்கதை.

படத்தை பற்றிய அலசல்

கிருஷ்ணா அழுத்தமான கதைகளில் நடித்து வருகிறார். அவருடைய திறமைக்கு இப்படமும் ஒரு வாய்ப்பு. நான்கு கதைகளில் இவரின் ரோல் தான் கதையின் உச்சம். கதையை சரியாக தான் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால் இவருக்கு இப்படத்தில் ஜோடியும் இல்லை, டூயட்டும் இல்லை.

விதார்த் அவருக்கென ஒரு தனிப்பாதை அமைந்திருக்கிறது. கிராமத்துக்கதைகள் என்றால் இவருக்கு அத்துப்படி. இப்படத்தில் சற்று வித்தியாசமான ரோல். என்னால் இதுவும் முடியும் என அவர் காட்டியுள்ளார். வேலைக்காக போய் கடைசியில் குண மாற்றம் அடைவது கொஞ்சம் ட்விஸ்ட்.

தன்ஷிகாவுக்கு காமெடியும் செட்டாகுமா என இப்படம் கேட்கவைத்துள்ளது. இவரும் தம்பி ராமையாவும் செய்யும் காமெடிகள் படத்தில் நமக்கான எண்டர்டெயின்மண்ட். செம ஃபன். தம்பி ராமையாவின் ஸ்டைல் மாறவில்லை. இளைஞர்களை இழுக்க இருஅர்த்த காமெடியும் செய்துள்ளார்.

தன்ஷிகா தம்பி ராமையாவிடம் இருந்து தப்பிக்க, வரும் வழியில் டி.ஆரின் கச்சேரி, ஆடல், பாடல், டி.ஆரின் ரசிகை போல (இந்த பொண்ண போய் பிரஸ்மீட் அழவைச்சிட்டிங்களே சார்) தாய்குலத்தின் தலைவா என கத்திக்கொண்டு குத்தாட்டம் போட்டு பெர்ஃபார்மன்ஸ் காட்டியிருக்கிறார்.

சரி, வெங்கட் பிரபு என ஒருவர் இருந்தாரே என நீங்கள் கேட்பது புரிகிறது. இவருடைய கேரக்டரும் ஒரு ட்விஸ்ட் தான், இந்நிலையில் அவர் தன் பங்கிற்கு தன் அனுபவமான நடிப்பை காட்டியிருக்கிறார். கடைசியில் இவர் தான் கதையை முடித்துவைக்கிறார்.

பேபி சாரா இன்னும் மனம் விட்டு போகவில்லை என தோன்றும். இவருக்கு ஒரு சின்ன கேரக்டர் என்றாலும் கிருஷ்ணா விசயத்தில் இவர் Lead கொடுப்பது கிளைமாக்ஸ் பரபரப்பு.

கிளாப்ஸ்

இயக்குனரின் முயற்சியை பாரட்டலாம். கதை எளிமையாக இருந்தாலும் அதை கோர்த்து கொடுத்த விதம் சூப்பர். இரண்டாம் பாதி சரியாக கதையை புரியவைக்கிறது.

கிருஷ்ணா, விதார்த், தன்ஷிகா, சாரா, வெங்கட் பிரபு என அனைவரையும் வாழ்த்தலாம். தேவையான நடிப்பு. ஒரு டூயட் பாடல் ஓகே. சென்சேஷனல்.

கிருஷ்ணாவுக்கு வந்த ஆபத்து விதார்த்துக்கு வரும் ட்விஸ்ட் தான் ஹைலைட். சரியான காட்சி நகர்வுகள். போதுமான இசை. சார்ஜர் காமெடி கலகல.

பல்பஸ்

முதல் பாதி சிலருக்கு புரிந்துகொள்ள கடினமாக தோன்றலாம்.

ஒரு சில இடங்களில் லாஜிக் இடிப்பு. கதையின் நீளத்தை சுருக்கியிருக்கலாம்.

மொத்தத்தில் விழித்திரு பார்ப்போரின் கண்களை விழிமூடாமல் வைத்திருக்கும். கதைகேற்ற டைட்டில். அனைவரும் பார்க்கலாம். சிரிப்பிற்கு குறைவில்லை.