Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாயவன் திரைவிமர்சனம்

மாயவன் திரைவிமர்சனம்
review

மாயவன் திரைவிமர்சனம்

2.75
Cineulagam

புதிய நடிகர்களின் படங்களுக்கு எதிர்பார்ப்பு சூழ்வது என்பது சினிமா இப்போதிருக்கும் நிலையில் அரிதான செயல். அப்படியாக நீண்ட நாளாக எதிர்ப்பார்ப்பில் இருந்த படம் மாயவன். அட்டகத்தி, அதே கண்கள் என நல்ல படங்களை தயாரித்த சி.வி.குமார் இப்போது மாயவன் மூலம் இயக்குனராகியிருக்கிறார். மாயவன் அவரின் பேர் சொல்லுமா? கதைக்குள் போகலாம்.

கதைக்களம்

இன்ஸ்பெக்டர் குமரனாக சந்தீப் கிஷன் மீண்டும் இறங்கியுள்ளார். ஆரம்பத்திலே ஒரு பிக்பாக்கெட் குற்றவாளியை மடக்கி பிடிக்க போகும் போது எதிர்பாராத விதமாக சாய் தீனாவால் கொடூர கொலை சம்பவம் அரங்கேறுகிறது.

அதை நோக்கி கவனம் திரும்ப பெரும் ஆபத்து இவருக்கு வந்து மரண வாசல் வரை சென்று மீண்டு வருகிறார். அதன் பின் வழக்கமாக தன் பணிகளை தொடங்க செல்லும் போது மனநல டெஸ்ட்க்கு போகிறார்.

அங்கே ஹீரோயினான மருத்துவர் ரம்யாவுடன் சிறு வாக்குவாதம் நிகழ்கிறது. பின் சந்தீப் எப்படியோ வேலைக்குள் மீண்டும் செல்ல ஒருநாள் மீண்டும் நடிகை ஒருவரின் கொலை சம்பவம் நடக்கிறது.

சோதனையில் இருக்கும்போது சந்தீப் உடலில் திடீர் மாற்றம். தன்னிலை அறியாமல் அவருக்குள் என்னவோ நடக்கிறது. பின் அதிலிருந்து மீண்டு பின் அதே குற்றவழக்கை கையில் எடுக்கிறார்.

இதற்கிடையில் அறிவியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் திடீரென மரணமடைகிறார். வழக்கு துப்பு துலங்காமல் இருக்கிறது. மிகவும் கைதேர்ந்து அறிவுள்ள ஒருவன் செய்தது போல் இருப்பதால் காவல் துறை தீவிரமாய் இறங்க ஏதோதோ புதியதொரு அறிவியல் அதிர்ச்சி தகவல் சிக்கிறது.

சந்தீப் குற்றவாளியை பிடித்தாரா, அவர் மனநிலை திடீரென மாறிப்போக காரணம் என்ன, அப்படி என்ன அதிர்ச்சி தகவல் சொல்லும் மர்மம், கொலையின் பின்னணி என்பது தான் மாயவன்.

படத்தை பற்றிய அலசல்

மாநகரம் படத்திற்கு பிறகு சந்தீப் கிஷனுக்கு இப்படம் சொல்லும் படியாக இருக்கும். நெஞ்சில் துணிவிருந்தால் அவருக்கு வைத்த குறையை இப்படம் போக்கும் என நம்பலாம்.

குமரன் இன்ஸ்பெக்டராக அவர் கதைக்குள் போராடுகிறார். ஆனால் போலிஸ்க்கான அந்த ஒரு மிரட்டல் தொனி வரவில்லையோ என கேள்வி எழுகிறது. ஆனாலும் ஓகே தான்.

மனநல டாக்டராக லாவண்யா அமைதியாக வந்து சந்தீப்க்கு வழக்கு விசயத்தில் பெரும் உதவியாக இருக்கிறார். ஒரு மாடர்ன் பெண் போல இருந்தாலும் பொறுமையான அணுகுமுறையால் ஸ்கோர் செய்கிறார்.

முதல் கொலை, இரண்டாம் கொலை, மூன்றாம் கொலை என அடுத்தடுத்து வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுகிறது. ஒவ்வொன்றையும் கதையுடன் பொருந்தும் விதமாக அமைத்திருக்கிறார்கள்.

சாய்தீனா, மைம் கோபி, டேனியல் பாலாஜி என ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விசயத்தில் ஒன்றுபடுகிறார்கள். இவர்களின் பின்னணி சிறியதாய் இருக்க இவர்களுக்கே தெரியாமல் ஏதோ ஒரு சம்பவம் நடக்கிறது.

நவீன அறிவியல் ஆராய்ச்சியின் தாக்கங்களும், மனநலம் சார்ந்த விசயங்களும் இந்த வளர்ந்த மருத்துவ உலகில் எப்படி மனித வாழ்க்கையில் பின்னப்படுகிறது என மெதுவாய் கதை நகர்த்துகிறார் இயக்குனர்.

ஒரு காட்சி நடக்கும் போது அடுத்து இதுதான் நடக்கும் என பட பிரியர்களால் ஊகிக்க முடியும். ஆனால் இந்த படத்தில் கொஞ்சம் அது மிஸ் ஆகலாம். நமக்குமே ட்விஸ்ட் தான்.

கிளாப்ஸ்

இயக்குனராக முதல் படத்தை முறையாக வடிவமைத்ததில் தயாரிப்பு அனுபவமும் வெளிப்படுகிறது.

முன்பாதி பின்பாதி கதையோடு பொருந்துகிறது. சொல்ல வந்த விசயத்தில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார்.

சந்தீப் கதையை அணுகுவதில் எதார்த்தம். கதை அவருக்கு கைகொடுக்கும்.

அறம், தீரன் படத்தை தொடர்ந்து ஜிப்ரான் இப்படத்திலும் பின்னணி இசை, பாடல் என நிறைவாக்கியிருக்கிறார்.

பல்ப்ஸ்

ஆரம்பத்திலிருந்து ஒரே மாதிரியான வேகம் தான் நகர்வது போல தோன்றும்.

சின்ன சின்ன லாஜிக் இருப்பது உற்று பார்க்கும் போது உடனே கண்ணில் சிக்குகிறது.

ஹீரோ ஹீரோயின் லவ், ரொமான்ஸ் எல்லாம் டேக் டைவர்சன் போல ஆகிவிட்டது.

கிளைமாக்ஸ் ட்விஸ்ட் முழுமையாக எல்லோருக்கும் புரியும் என்றால் கேள்விக்குறி தான்.

மொத்தத்தில் மாயவன் வித்தியாசமாக மனம் ஈர்க்கிறான். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.