Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உள்குத்து திரை விமர்சனம்

உள்குத்து திரை விமர்சனம்
review

உள்குத்து திரை விமர்சனம்

2.75
Cineulagam

சில சினிமா படங்களில் நல்ல கதை இருந்தாலும் கமர்சியலுக்காக சில மசாலாக்கள் சேர்க்கப்படும். அப்படியான படங்கள் பல உண்டு என்றாலும் அதிலிருந்து வித்தியாசப்பட்டு வந்திருக்கிறது உள்குத்து.

சரி வாருங்கள் அப்படி என்ன குத்து இருக்கிறது என பார்க்கலாம்.

கதைக்களம்

முட்டம் அழகான மீனவ கிராமம். கடற்கரையில் உட்கார்ந்து எதையோ யோசித்துகொண்டிருகிறார் ஹீரோ தினேஷ். வழியில் எதிர்பாராத விதமாக பால சரவணனை சந்திக்கிறார்.

இருவரும் பேசி பின் நண்பர்களாகிறார்கள். பின் தன் வீட்டிற்கு தினேஷை அழைத்து செல்கிறார். பாலாவுக்கு ஒரு சகோதரியாக ஹீரோயின் நந்திதா. இவரின் பெயர் கடலரசி.

ஊரில் பெரிய டானாக சரத். இவருக்கு பக்க துணையாக திலீப் சுப்புராயன். கந்து வட்டி தொழில் செய்து அட்டகாசம் செய்கிறார்கள். வழக்க போல அடிதடி, மிரட்டல் தான்.

இந்நிலையில் தினேஷ் ஒரு நாள் சரத்தின் கூட்டாளி ஒருவரை அடித்து துவம்சம் செய்கிறார். இது பெரிய பிரச்சனையாக திலீப்புடன் சமரசமாகிறார். ஒரு நாள் திலீப் கொல்லப்படுகிறார்.

எப்படியோ தந்திரமாக பின் சர்த்துடன் நெருங்கி பழகிவிடுகிறார். திலீப்பை கொன்றது யார் என பார்க்கும் போது கதை ஃபிளாஷ்பேக்கிற்கு போகிறது.

தினேஷின் பின்னணி என்ன? திலீப்பை கொன்றது யார் என்பது கதை நகர்கிறது.

படத்தை பற்றிய அலசல்

தினேஷை வைத்து திருடன் போலிஸ் என நல்ல படத்தை கொடுத்தவர் இயக்குனர் கார்த்திக் ராஜூ. இதனை தொடர்ந்து இரண்டாவது படமாக அவருக்கு உள்குத்து வந்துள்ளது.

அட்டக்கத்தி படம் மூலம் பெயர் பெற்றவர் தினேஷ்க்கு இப்படத்தில் ஒரு நல்ல கதாப்பாத்திரம் தான். அப்படத்தை விட இந்த படத்தில் அவரில் நடிப்பு குறைவாக இருக்கிறதோ என ஒரு ஃபீல் இருக்கிறது.

கதையில் ராஜா என்ற ரோலோடு அவரின் நடிப்பு பொருந்துகிறது. சில படங்களில் நடித்து அனுபவம் பெற்றவர் நடிகை நந்திதா. இந்த கதையில் அவருக்கான ரோல் தெரிந்து நடித்திருக்கிறார்.

அவரின் சிரிப்பு தான் கொஞ்சம் இம்ப்பிரஷன். காமெடி நடிகராக பால சரவணன் இப்படத்தில் சுறா சங்கராக வருகிறார். வழக்கம் போல அவரின் டைமிங் டையலாக்.

ஆனாலும் ஒரு சில காட்சிகளில் இவரின் ரோல் கொஞ்சம் டல்லடிகிறது. பின் அவருடன் கூட்டாளிகளோடு செய்யும் காமெடிகள் பெரிதளவில் இல்லை.

ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படத்திற்கு உண்டான கதையுள்ள இந்தப் படம் மிக விறுவிறுப்பாக நகரவேண்டும். ஆனால் முதல் பாதியில் மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி வேகம் கூட்டுகிறது.

ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்க்கிறது. கடற்கரை கிராமங்களை வைத்து காட்சிகளை இயல்பாக்கியிருக்கிறார் வர்மா.

வில்லன்களாக வரும் சரத், திலீப் சுப்புராயன் கந்து வட்டி கதாபாத்திரத்தை அப்படியே பிரதிபலிக்கிறார்கள். சாயா சிங், ஜான் விஜய் என பலரும் தங்களது கதாப்பாத்திரத்தோடு ஒன்றிப்போகிறார்கள்.

கிளாப்ஸ்

பிளாஷ்பேக், கிளைமேக்ஸ் என அதிலேயே கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குனர்.

தேவையில்லாத காட்சிகள், பாடல்கள் இல்லாமல் கதையை 2 மணிநேரத்திலேயே முடித்துவிட்டார்கள்.

ராஜாவின் கதாபாத்திரத்தில் ட்விஸ்ட் வைத்து இடைவேளைக்கு பின் பரபரப்பை கூட்டுகிறார்கள்.

பல்ப்ஸ்

ஒரு காட்சியில் வில்லனை கொன்றது போலிஸ் என தினேஷின் அப்பா சொல்ல இவரோ ஒன்றை சொல்ல குழப்புகிறார்கள். கடைசியில் இதை புரியவைக்கவே இல்லை.

பால சரவணின் காமெடிகள் பெரிதும் ரசிக்கும் படியாக இல்லை. மாற்றலாம்.

சில இடங்களில் தினேஷின் ரியாக்சன் எடுபடவில்லையோ என கேட்கவைக்கிறது.

மொத்தத்தில் இப்படம் உள்குத்து சுற்றி வளைக்காமல் நேரடியே விசயத்தை சொல்கிறது.