Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நிமிர் திரை விமர்சனம்

நிமிர் திரை விமர்சனம்
review

நிமிர் திரை விமர்சனம்

3
Cineulagam

உதயநிதி ஸ்டாலின் காமெடி படங்களில் மட்டும் நடித்து வந்த இவர் மனிதன், இப்படை வெல்லும் என கொஞ்சம் தன் பார்முலாவை மாற்றினார். ஆனால், இந்த முறை முற்றிலுமாக வேறு தளத்தில் தன் நடிப்பிற்கு தீனி போடும் ஒரு கதாபாத்திரத்தை நிமிர் மூலம் தேர்ந்தெடுத்துள்ளார், நிமிர் அவரை நிமிர வைத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

மலையாள சினிமாவில் பிரமாண்ட வெற்றியை பெற்ற படம் மகேஷண்டே பிரதிகாரம். இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் நிமிர், ஊரில் ஒரு போட்டோ ஸ்டுடியோ வைத்து வாழ்பவர் உதயநிதி.

தான் உண்டு தன் வேலை உண்டு என வாழ்ந்து வருபவர், எந்த ஒரு பிரச்சனைகளிலும் தலையை கொடுக்காமல் இருப்பவர், சம்மந்தமே இல்லாமல் ஒரு சண்டையில் தலையிடுகிறார்.

அப்போது சமுத்திரக்கனி அவரை அடித்து அசிங்கப்படுத்த, இனி காலில் செருப்பே போடமாட்டேன், சமுத்திரகனியை அடித்த பிறகு தான் செருப்பு அணிவேன் என்று உதயநிதி சபதம் எடுக்கின்றார்.

இதை தொடர்ந்து இவர் சமுத்திரகனியை அடித்தாரா, காலில் செருப்பு அணிந்தாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

உதயநிதி திரைப்பயணத்தில் மனிதனுக்கு பிறகு இது தான் பெஸ்ட் என்று கூறிவிடலாம், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அதை விட ஒரு படி மேல் எனலாம். ஏனெனில் நடிக்கின்றேன் என்று மெனெக்கெடாமல் மிக இயல்பாக நடித்துள்ளார்.

ஒரு படத்தை ரீமேக் செய்வது என்றால் மிக முக்கியம் கதாபாத்திர தேர்வு, அந்த வகையில் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் என சரியான ஆட்களை தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குனர் ப்ரியதர்ஷன். படத்தில் நடித்த அனைவருமே தங்கள் கதாபாத்திரத்தை மிக அழகாக செய்துள்ளனர்.

கருணாகரன் படம் முழுவதும் ஜாலியாக வந்து சென்றாலும், கடைசியாக எம்.எஸ்.பாஸ்கரிடம் கோபம் கொள்ளும் போது, அதற்கு பாஸ்கர் அழும் காட்சி என ஸ்கோர் செய்கின்றனர். அதேபோல் தன் தங்கச்சியை கிண்டல் செய்தவனை அடிக்க குங்பூ கற்று கொள்ளும் கதாபாத்திரம் மிகவும் கவர்கிறது.

ஊர் பிரச்சனை பஞ்சாயத்து செய்து முடித்து வைக்கும் அருள்தாஸ் என அனைவருமே ரசிக்க வைக்கின்றனர். அனைத்திற்கும் மேலாக படத்தில் வரும் பாதி காட்சியில் மௌனமாகவே இருந்தாலும் இயக்குனர் மகேந்திரன் மனதில் நிற்கின்றார்.

இத்தனை பலம் இருந்தாலும் மலையாளத்தில் இருந்த யதார்த்தம் இதில் கொஞ்சம் குறைவு தான் என தோன்றுகின்றது. ஏனெனில் அங்கு மேக்கப் என்பதே பலருக்கும் இருக்காது, இதில் ஹீரோயின் எல்லாம் எப்போதும் புல் மேக்கப்பில் தான் உள்ளனர், அதிலும் படத்தின் ஓப்பனிங்கில் வரும் ஒரு பாடல் படு செயற்கை.

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு சமீபத்தில் வந்த படங்களில் இது பெஸ்ட் என்று சொல்லி விடலாம், கண்களே குளிர்ச்சி ஆகும் படி தேனியை படம்பிடித்துள்ளனர். தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் இனிமை, பின்னணி இசை வேறு ஒருவர் அவரும் கலக்கியுள்ளார்.

க்ளாப்ஸ்

நடிகர், நடிகைகளின் தேர்வு, அவர்களும் திறம்பட நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு, இசை போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்.

படத்தில் வரும் சின்ன சின்ன காட்சி கூட ரசிக்க வைக்கின்றது, கஞ்சா கருப்புவே பிக்பாஸ் பற்றி திட்டுவது, மலேசியாவில் இருக்கும் இமான் அண்ணாச்சி தோப்பிற்கு இங்கு அடித்துக்கொள்வது போன்ற காட்சிகள் கலாட்டா.

படத்தின் சண்டைக்காட்சிகள் அதிலும் கிளைமேக்ஸில் சமுத்திரகனியிடம் உதயநிதி மோதும் காட்சி, அந்த கூட்ட நெரிசலில் இருவரும் மோதுவது செம்ம யதார்த்தமாக எடுத்துள்ளனர்.

பல்ப்ஸ்

முன்பே சொன்னது போல தான் மலையாளத்தில் இருந்த யதார்த்தம் இதில் மிஸ்ஸிங்.

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூட சுவாரஸ்ய படுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் உதயநிதி 'மனிதனுக்கு' பிறகு மீண்டும் ‘நிமிர்’ந்துவிட்டார்.