Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மன்னர் வகையறா திரை விமர்சனம்

மன்னர் வகையறா திரை விமர்சனம்
review

மன்னர் வகையறா திரை விமர்சனம்

2.75
Cineulagam

வெள்ளிக்கிழமை வந்தாலே விமல் படம் வரும் காலம் போய் ஒரு வருடம் கழித்து விமல் நடிப்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் மன்னர் வகையறா. கிராமத்து கதை என்றாலே விமலுக்கு அல்வா சாப்பிடுவது போல், அப்படியொரு கதைக்களத்தில் தான் விட்ட இடத்தை பிடித்தாரா விமல்? பார்ப்போம்.

பெரிய படங்களுக்கு நடுவே பெருமையுடன் இறங்கியிருக்கிறது மன்னர் வகையறா. படத்திற்கு பெருமை சேருமா, பெரும்பான்மை கிடைக்குமா என பார்க்கலாம்.

கதைக்களம்

படத்தின் கதாநாயகன் விமல் சட்டம் படிப்பு படித்து வருகிறார். அதில் தான் அவருக்கு சிக்கல். ஆனாலும் அதை விட பெரும் சிக்கல் படத்தில் அவருக்கு உள்ளது. இவரின் மாமாவாக மட்டுமல்லாமல் நண்பனாக ரோபோ சங்கர் கூடவே இருக்கிறார். படம் முழுக்க இவர்கள் தான்.

ஊரில் மதிக்கத்தக்க தலைவராக இருக்கும் பிரபு மற்றும் அவரின் மனைவி மீரா கிருஷ்ணனுக்கு கார்த்திக், விமல் என இரு ஆண் பிள்ளைகள். பெரிய வகையறா தான்.

அதே போல ஊரில் மிரட்டல் ஆளாக இருக்கிறார் வம்சி கிருஷ்ணா. இவருக்கு சாந்தினி, கயல் ஆனந்தி என இரு தங்கைகள். இவர்களின் அம்மா, அப்பாவாக சரண்யா பொன்வண்ணன், ஜெயபிரகாஷ் இருக்கிறார்கள்.

இதற்கிடையில் ஊர் விசயத்தில் வில்லனுக்கும் பிரபுவின் குடும்பத்திற்கும் ஒரு பகை. அதே நேரத்தில் பெரும் பின்னணிக்கு இடையே வில்லனின் தம்பிக்கும் சரண்யாவின் மூத்த மகளுக்கும் திருமண ஏற்பாடு நடைபெறுகிறது.

முகூர்த்த நேரத்தில் மணமகள் கடத்தப்படுகிறார். அவரை கடத்தியது முக்கியமான ஒருவர். ஒரு பக்கம் விமலின் அண்ணன் கார்த்திக் விசம் குடித்து உயிருக்கு போராடுகிறார். கதை இப்படியே நகர்கிறது.

இதற்கிடையில் விமல், ஆனந்தி இருவருக்கும் காதல் ஓடிக்கொண்டிருக்கிறது. வில்லனால் விமல் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. விமல் பிழைத்தாரா, அவரது அண்ணனுக்கு என்னானது, கயல் ஆனந்தியின் காதல் கைகூடிதா, மணமகளை கடத்தியது யார் என்பது தான் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

ஹீரோ விமலுக்கு என்று ஒரு தனி இளைஞர்கள் பட்டாளம் ரசிகர்களாக இருக்கிறார்கள். சில நாட்களாக ஒரு ஹிட் கொடுக்க போராடுகிறார். அவருக்கென ஒரு கதை பாணி ஆரம்பம் முதலே அமைந்துவிட்டது.

தன் பலத்தை கையில் எடுத்து மன்னர் வகையறாவில் இறங்கியிருக்கிறார். அவரின் முயற்சி இப்படத்தில் நல்ல விதமாய் அமையும் என படம் சொல்லும். தன் மருமகன் “லா” படிக்கிறான் என இவரை வைத்து ரோபோ சங்கர் செய்யும் அட்டகாசம் அடடா தான்.

பிரபுவுக்கு படத்தின் கௌரவமான வேடம். ஊர் தலைவராக மட்டுமில்லாமல் ஒரு குடுமபத்தலைவராக பிரச்சனையான சமயங்களில் பொறுமை காப்பது இவரின் இயல்பு.

ஹீரோயின் கயல் ஆனந்தி இப்படத்தில் தன் தோழிகளுடன் சேர்ந்து வீட்டிலும் காலேஜிலும் குறும்பு செய்யும் கடைக்குட்டி பெண். விமலை வைத்து இவர் விளையாட்டு காட்ட கடைசியில் காதலாகி விடுகிறது.

ஒரு கட்டத்தில் தன் ஆசையை தூக்கி வைத்துவிட்டு இவர் துணிவாக எடுத்த முடிவு எதார்த்தம். தன் திருமணத்தின் போது ஆள் மாயமாகிவிடுகிறார். எங்கு சென்றார் என்பது ட்விஸ்ட்.

அம்மா கேரக்டருக்கு பெயர் பெற்ற சரண்யா பொன்வண்ணன் இப்படத்தில் தன் குறும்பு கலந்த நடிப்போடு பாசத்தை காட்டுகிறார். ஆனால் ஒரு சம்பவத்தால் மனம் உடைந்து போகிரார். அப்படி என்ன இவரின் மனதிற்குள் என்பதை படத்தில் பாருங்கள்.

ரோபோ சங்கர் படம் முழுக்க ஹீரோவுடன் செய்யும் காமெடி காட்சிகளை நிறைவாக்குகிறது. அதே போல சிங்கம் புலி விமல் குடும்பத்தில் இருந்து டைமிங் பஞ்ச் அடித்து சிரிக்க வைப்பது ரசனையானது.

கடைசியில் வந்து கச்சிதமாக காமெடி செய்கிறார் யோகி பாபு. வந்ததும் சிரிப்பு தான். வாய் திறந்து பேசினால் இன்னும் சிரிப்பு தான். தானாக வந்துவிடுகிறது.

தனுஷ், விஷால் ஆகியோரை வைத்து படம் எடுத்த இயக்குனர் பூபதி பாண்டியன் தற்போது கதைக்கான ஹீரோவை சரியாக தான் தேர்ந்தெடுத்துக்கிறார். ஃபேமிலி செண்டிமெண்ட்.

படத்திலுள்ள ஒரு பாடலை அவரே எழுதியிருக்கிறார். பாடல்கள் கேட்கும் விதம். அதில் ஒரு பாடலின் மெட்டு பின்னணி இசையாக பட காட்சிகளை ரசிக்க வைக்கிறது.

கிளாப்ஸ்

படத்திற்கு கதைக்கேற்றவாரு காட்சிகளை அமைத்த விதம் நன்று.

சீனியர் நடிகர், நடிகைகள் முதல் நடித்தவர்கள் அனைவருக்கும் இயல்பான நடிப்பு.

காமெடி தான் கலர்ஃபுல். ரோபோ சரியான கவுண்டர். அதிலும் ஜாதி பற்றி சரியான பஞ்ச் கொடுப்பார்.

ஒரே மாதிரியான பின்னணி இசையாக இருந்தாலும் படத்தில் எளிமையாக இருந்தது.

பல்ப்ஸ்

முதல் பாதியில் ஹீரோ, ஹீரோயின் அதிகமாக உரையாடும் காட்சிகள் எப்போது முடியுமோ ரகம்.

படத்தை காட்சிகள் அமைப்பதில் இன்னும் பிளான் செய்திருக்கலாம்.

சரண்யாவின் அண்ணன் அண்ணன் என அடிக்கடி சொல்லி கடைசியில் அவரை பற்றி எதுவுமே காட்டவில்லை.

முதல் பாதியில் அடுத்தடுத்து மூன்று பாடல்கள். முடியலப்பா சாமி.

மொத்தத்தில் மன்னர் வகையறா. காமெடி வகையறா. மனம் நிறைவு.