Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சவரக்கத்தி திரைவிமர்சனம்

சவரக்கத்தி திரைவிமர்சனம்
review

சவரக்கத்தி திரைவிமர்சனம்

3
Cineulagam

பல படங்கள் வெளியானாலும் சில பிரபலங்களுக்காகவே படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தானாக தோன்றிவிடும். அதில் இயக்குனர் மிஷ்கினின் கதையமைப்பில் சவரக்கத்தி வெளிவந்துள்ளது. இந்த கத்தி எப்படிப்பட்டது, நன்கு தீட்டப்பட்டது தானா என பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் கதாநாயகன் ராம். இவரும் ஒரு இயக்குனர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். படத்தில் இவரின் பிரதான தொழில் சவரம் செய்தல். நடிகை பூர்ணா இவரின் மனைவி. இரண்டு குழந்தைகள் என வெகுளியாய் இருக்கிறார்.

ஆனால் பேச ஆரம்பித்தார் என்றால் உலகத்தையே விற்றுவிடுவார் என தோன்றும். பைக்கில் குடும்பத்துடன் மைத்துனரின் பதிவு திருமணத்திற்காக செல்கிறார்.

போகிற வழியில் விபத்து போன்ற ஒரு நிகழ்வு. எதிர் முனையில் பார்த்தால் மிஷ்கின். டான் போல சில கூட்டாளிகளை வைத்துகொண்டு இவர் அட்டகாசம் செய்கிறார்.

வழக்கம் போல ராம் வாய் விட, ஒரு வித்தியாசமான பகை வெறி மிஷ்கினுக்குள் பற்றி விடுகிறது. இதனால் அவர் ராம் மீது மிகவும் கோபத்துடன் விரட்டி, விரட்டி பிடித்து, தீர்த்து கட்ட நினைக்கிறார்.

மாலை ஆறு மணி என ஒரு காலக்கெடு அவருடன் சுற்றுகிறது. எதற்காக இப்படி. அப்படி என்ன இவரின் பின்னால்.

ஒரு பக்கம் தன் பூர்ணா நிலை மாறி போக நடந்து போன சம்பவங்களால் கேளாத காதை வைத்து இவர் படும் அவஸ்தைகள் பல. அதற்குள் இப்படியா என கேட்குமளவுக்கு ஏதேதோ நடந்துவி்றது.

பின் என்ன பெரிய சைஸ் வெட்டு கத்தியை தீட்டுகிறார் மிஷ்கின். ஒரு பக்கம் சவரக்கத்தியுடன் காணாமல் போன தன் மனைவி குழந்தைகளை தேடி அலைகிறார் ராம்.

கடைசியில் ராம் சிக்கினாரா, மிஷ்கினின் மனநிலை என்னானது? சவரக்கத்தி வென்றதா, வெட்டுக்கத்தி பேசியதா என்பது தான் படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல்

இயக்குனர் ராம். அவரின் படங்கள் எப்படி இருக்கும் என்பது படப்பிரியர்களுக்கு நன்கு தெரியும். ஒரு அழுத்தமான விசயத்தை இப்படத்திலும் பதியவைக்கிறார். கேரக்டருக்காக உருண்டு பிரண்டிருக்கிறார்.

பிச்சை கேரக்டரில் இவரின் பங்கு மிக முக்கியமானது. கடைசிவரை பயந்து பயந்து ஓடிக்கொண்டே இருக்கிறார். பிரச்சனைகள் சுமூகமாக முடியும் நேரத்தில் மீண்டும் வாண்ட்டாக வந்து அனைவரும் மாட்டிகொள்ளும் விதம் காட்சிகளை நீட்டிப்பதோடு காமெடியும் கலந்து விட்டது.

இயக்குனர் மிஷ்கின். ஒரு வித்தியாசமான போக்கில் படத்தை கொடுக்கக்கூடியவர். இப்படத்திலும் அவரின் கதையமைப்பு வழக்கமான ரகம் தான். ஆனாலும் அவரே இறங்கி நடித்திருக்கிறார்.

ராமுக்கு வில்லன் இவர் தான். பிச்சையை தேடி போகிற வழியில் வேறொரு கும்பலிடம் மாட்டிக்கொள்வது கொஞ்சம் ட்விஸ்ட். இவரும் நிற்கவில்லை. ஓயாது ஓடிய பிழைப்பு தான்.

நடிகை பூர்ணா திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிக்கும் அவரின் முயற்சியை வரவேற்க வேண்டும். இப்படத்தில் வீராப்பாய் வசனம் பேசும் ஒரு முழுமையான கிராமத்து பெண்.

வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிவிடுவார். எல்லாம் என்றால் எல்லாம் தான். என்ன சொல்ல. படத்தில் பாருங்கள். ஆனால் பல இடங்களில் பீப் தான். பிறகு எதற்கு இது?? கர்ப்பிணியாக இருந்த போதும் ஓடிய பிழைப்பு தான்.

படத்தின் எளிமையான கதைக்கேற்ப போதுமான காட்சிகள். நிஜத்தை நிழலாய் காட்டாமல் உள்ளபடி காட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர். சொல்ல வந்த விசயத்தை காட்சிகளாக இயல்பாக கொண்டு வந்திருக்கிறார்.

கமர்சியல் படவுலகில், மசாலா ஜாலம் செய்யாமல் புதுமையான கதையாக கொடுத்திருக்கிறார் மிஷ்கின். காமெடிக்கென தனியே ஆள் இல்லாவிட்டாலும் இவர்கள் சில விசயங்கள் இயல்பாக காமெடியாகிவிட்டது.

பின்னணி இசைக்கு பெரிதாய் முக்கியத்துவம் இல்லை. ஆனாலும் போதுமானதாக கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் அரோல் கொரேலி.

கிளாப்ஸ்

படத்தின் ஒரு பாடல் தான். ஒரு விசயத்திற்காக மது ஐயர் பாடும் நல்ல கருத்துள்ள பாடல்.

வாய் வார்த்தைகள் சில நேரத்தில் வாள் கத்தி போலாகிவிடும் என் சொல்லும் மெசேஜ் நன்று.

இரத்த சொந்தத்தில் நாம் அனைவரும் ஒன்று பட்டவர்கள் என்ற கிளைமாக்ஸ் நல்ல சென்சேஷன்.

பல்ப்ஸ்

மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் சுற்றி வந்தது போல இருந்தது சில காட்சிகள்.

சாதாரண விசயத்திற்காக ஒரு பெரிய வில்லன் இப்படி செய்வானா என கேட்கவைக்கிறது.

மொத்தத்தில் சவரக்கத்தி சாதாரண கத்தி அல்ல. ஷார்ப்பான கத்தி.