Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Bharat Ane Nenu திரை விமர்சனம்

Bharat Ane Nenu திரை விமர்சனம்
review

Bharat Ane Nenu திரை விமர்சனம்

3
Cineulagam

மகேஷ் பாபு தொடர் தோல்விகளால் மிகவும் சறுக்கலில் உள்ளார். ஏனெனில், கடைசி படமாக ஸ்பைடர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து அகல கால் வைத்து தோல்வியுற்றார்.

இந்நிலையில் இனி நம் பாதை தெலுங்கு தான் என புரிந்துகொண்டு பிரபல இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வெளிவந்துள்ள படம் தான் பாரத் அனே நேனு, மகேஷ்பாபுவை இப்படம் மீட்டு எடுத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

மகேஷ்பாபு லண்டனில் பட்டப்படிப்பு முடித்து ஜாலியாக வாழ்ந்து வருகின்றார். அந்த நேரத்தில் ஒரு போன் கால், அவருடைய தந்தை(சரத்குமார்) இறந்ததாக ஒரு செய்தி வருகின்றது.

அதை தொடர்ந்து அவர் ஆந்திரா வருகின்றார். ஆந்திராவின் முதலமைச்சர் சரத்குமார், அவர் இறப்பிற்கு பிறகு அந்த பதவி மகேஷ்பாபுவை தேடி வருகின்றது.

பிரகாஷ்ராஜின் ஆலோசனைப்படி மகேஷ் பாபு ஆட்சியில் அமர, ஆனால், தங்கள் கட்சியில் உள்ளவர்களே தான் நல்லது செய்ய இடையூறாக இருக்க, அதன் பின் அந்த சதிகளை எல்லாம் மகேஷ் பாபு எப்படி முறியடிக்கின்றார், தன் தந்தை மரணத்திற்கு பின் உள்ள மர்மம் என்ன? என்பதையும் சேர்ந்து கண்டுப்பிடிப்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

மகேஷ் பாபு ப்ரின்ஸ் இஸ் பேக் என்றே சொல்லலாம், நீண்ட வருடங்களுக்கு பிறகு தன் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மூலம் செம்ம விருந்து கொடுத்துள்ளார். முதலமைச்சர் ஆனதும் முதன் முறையாக ட்ராபிக்கை முறைப்படுத்துவது, கவர்மெண்ட் பள்ளிக் கூடங்களை சரிபடுத்துவது என அட இப்படி ஒரு இளம் முதலமைச்சர் நமக்கு இல்லையே என்று கேட்க வைக்கின்றார்.

முதலமைச்சர் படம் இதில் காதல் எப்படி கொண்டு வருவது என்று கேட்க நினைத்தாலும், அதை கதைக்கு ஏற்றவாரு அழகாக கதையில் கொண்டு வந்துள்ளார் கொரடலா சிவா. ஹீரோயினுக்கு பெரிதும் வேலையில்லை என்றாலும் அவரை வைத்தே ஆட்சியை விட்டு மகேஷ் பாபுவை இறக்க செய்யும் வேலை என கதையுடன் க்யாரா அத்வானி பயணிக்கின்றார்.

பிரகாஷ்ராஜ் சைலண்டாக வந்தாலும் மிரட்டுகின்றார், தன் கட்சியிலேயே அவருக்கு எதிராக இருப்பவர்களை கண்டு அஞ்சாமல் மகேஷ்பாபு எடுக்கும் முயற்சிகள் சபாஷ், அதிலும் இரண்டாம் பாதியில் தியேட்டரில் வரும் சண்டைக்காட்சி சரவெடி.

ஆனால், என்ன இருந்தாலும் முதல்வன் சாயல் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை, கிட்டத்தட்ட காதல் காட்சிகள் கூட அதேபோல் தான். மேலும், பல இடங்களில் லாஜிக் மீறல், முதலமைச்சரை ஒரு போட்டோவை வைத்து ஆட்சியை விட்டு தூக்க முடியும் என்பது கொஞ்சம் சினிமாத்தனம் தான்.

ரவி கே சந்திரன், திருவின் ஒளிப்பதிவு செம்ம கலர்புல்லாக இருக்கின்றது. சிட்டி, கிராமம் என கதை பயணித்தாலும் சிறப்பாக அனைத்தையும் காட்டியுள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையமைப்பில் பாரத் அனே நேனு தீம் பாடல், இரண்டாம் பாதியில் வரும் கோவில் பாட்டு ரசிக்க வைக்கின்றது.

க்ளாப்ஸ்

மகேஷ் பாபுவின் ஸ்கிரீன் ப்ரசன்ஸ்.

படத்தின் வசனங்கள், குறிப்பாக அடித்தட்டு மக்களின் நலனுக்காக பேசும் காட்சிகள்.

படத்தில் வரும் ஒரு ப்ரஸ் மீட் காட்சி மற்றும் சண்டைக் காட்சிகள், கொஞ்சம் மசாலா தூக்கல் என்றால் ரசிக்கும் ரகம்.

பல்ப்ஸ்

படத்தின் நீளம், இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

காதல் காட்சிகள் நன்றாக இருந்தாலும் அதை தொடர்ந்து வரும் பாடல்கள் கொஞ்சம் சோதிக்கின்றது.

மொத்தத்தில் சில வருடங்கள் தோல்வியில் இருந்த மகேஷ் பாபுவிற்கும், வருத்தத்தில் இருந்த அவருடைய ரசிகர்களுக்கும் செம்ம ஆந்திரா மீல்ஸ் தான் இந்த பாரத் அனே நேனு.