Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்மபிரபு திரைவிமர்சனம்

தர்மபிரபு திரைவிமர்சனம்
review

தர்மபிரபு திரைவிமர்சனம்

2
Cineulagam

அண்மைகாலமாக உச்சத்தில் இருந்து வரும் காமெடியன் யோகி பாபு. காமெடிகள் செட்டாவதால் படமும் இவருக்கு அடுத்தடுத்து தேடி வருகிறது. அதே வேளையில் ஹூரோவாக ஒரு காமெடி படம் அவரின் நடிப்பில் இன்று தர்மபிரபு என வெளியாகியுள்ளது. இந்த பிரபு எப்படிப்பட்டவர் என பார்க்கலாம்.

கதைக்களம்

ராதாரவி எமலோகத்து ராஜாவாக ஆட்சி செய்து வருகிறார். அவருக்கு மனைவியாக ரேகா. சித்திரகுப்தராக ஆர் ஜே. ரமேஷ். ராதாரவிக்கு வயதாகிவிட்டதால் தன் அரியணையும், ஆட்சியையும் யாருக்கு கொடுக்கப்போகிறோம் என்ற யோசனை. இறுதியில் மகன் யோகிபாபுவை அரசனாக்கிவிடுகிறார்கள்.

அந்த அரியணையை தான் அடையவேண்டும் என எதிர்பார்த்த எமலோக முக்கிய பொறுப்பில் உள்ளவர் யோகிபாபுவுக்கு சதி வலை விரித்து அதில் சிக்க வைக்கிறார்.

இதற்காக பூலோகம் சென்ற போது எமதர்மர் ஒரு உயிரை காப்பாற்றிவிடுகிறார். ஆனால் அதன் விளைவோ வேறு. இதனால் சிவனாக வரும் மொட்டை ராஜேந்திரனின் கோபத்திற்கு யோகிபாபு ஆளாகிறார். பதவிக்கு காலக்கெடு விதிக்கப்படுகிறது.

எமா தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்தாரா, விதிமுறை மீறாமல் நடந்து கொண்டாரா, ஆட்சியை மீண்டும் தக்கவைத்தாரா, தற்போது நடக்கும் சமூக பிரச்சனைகளுக்கு அவர் சொல்லும் தீர்வு என்ன என்பதே தர்மபிரபு.

படத்தை பற்றிய அலசல்

சமூகத்தில் தற்போது சமூகத்தில் நடக்கும் ஆணவக்கொலைகள், காதலுக்கு எதிரான மனப்போக்கு, ஜாதி அரசியல், ஆணுக்கும் பெண்ணும் சம உரிமை என சில பெண்கள் செய்யும் கேவலமான செயல்கள் என அண்மையில் நடந்த பல விசயங்கள் படத்தில் பிரதிபலிக்கிறது.

யோகி பாபு காமெடியின் கிங் ஆகிவிட்டார். வழக்கம் போல அவர் வாயிலிருந்து காமெடி கவுண்டர்கள் சரளமாக வந்து விழுகிறது. தமிழை அழிக்க நினைப்பவர்கள் பற்றி யோகிபாபு சொல்லும் டையலாக்குக்கு வரவேற்பு.

படம் முழுக்க அவருக்கும் ரமேஷ்க்கும் காம்பினேசன் செட்டாகிவிட்டது. மந்திரி சபை என்ற பெயரில் கணேஷ் செய்யும் லூட்டிகள் கலகலப்பு.

ராதா ரவிக்கும் ரேகாவுக்கும் சில காட்சிகள் தான், ஆனால் வாரிசு அரசியலை விமர்சிக்கும் விதமாக இவர்கள் வரும் காட்சிகள் கவுண்டர்களுக்கு கைகொடுக்கிறது.

சிவபெருமானாக இருக்கும் ராஜேந்திரன் வழக்கம் போல தன் ஸ்டைலில் கூத்தடிப்பதும், பேசுவதும் சற்று இன்ட்ரஸ்டிங்.

அம்பேத்கர், பெரியார், காந்தி, சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரிடன் தற்போது நடக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்கும் விதமாக இருக்கும் காட்சிகள் கொஞ்சம் ரிலாக்ஸ்.

ஒளிப்பதிவு, காட்சிகள் என இயக்குனர் ஒரு நீண்ட பயணத்தோடு சென்றாலும் இரண்டாம் பாதி கொஞ்சம் இண்டரஸ்டிங்.

கிளாப்ஸ்

எமதர்மனை தன் ஸ்டைலுக்கு மாற்றிய யோகிபாபு. நைஸ் காமெடி கவுண்டர்கள்.

தற்போதைய சமூக பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் விதம் ஓகே.

பல்பஸ்

கதை போக்கை இன்னும் சுருக்கி முறைப்படுத்தியிருக்கலாம் இயக்குனரே.

மொத்தத்தில் தர்மபிரபு சமகால சமூக பிரச்சனைக்கு நல்ல தீர்வு சொல்கிறார். ஆனாலும் படம் பார்ப்பவர்களின் பொறுமை சோதிக்கிறதோ என்ற ஃபீல்.