Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பக்ரீத் திரை விமர்சனம்

பக்ரீத் திரை விமர்சனம்
review

பக்ரீத் திரை விமர்சனம்

2.75
Cineulagam

விக்ராந்த பல வருடங்களாக தனக்கென்று ஒரு அடையாளத்தை பிடிக்க போராடி வருகின்றார். நாமும் அவர் இதில் ஹிட் அடிப்பார், அதில் ஹிட் அடிப்பார் என ஆவலுடன் காத்திருக்க, அப்படி ஒரு ஹிட் இந்த பக்ரீத்தில் கிடைத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

தன் விவசாய நிலத்தை விற்க மனமில்லாமல் லோன் வாங்கி எப்படியாவது விவாசயம் செய்து விட வேண்டும் என்று விக்ராந்த் போராடி வருகின்றார். அந்த சமயத்தில் ஒரு பாய் வீட்டிற்கு கடன் வாங்க விக்ராந்த் செல்ல, அங்கு பக்ரீத் ஸ்பெஷலாக ஒரு ஒட்டகம் வருகின்றது.

அதனுடன் குட்டி ஒட்டகம் ஒன்று வர, அதை வெட்ட மனமில்லாத அந்த பாய்-யிடம், இதை நான் வீட்டிற்கு கொண்டு செல்கிறேன் என விக்ராந்த் கேட்டு வீட்டிற்கு கொண்டு செல்கின்றார். விக்ராந்தின் நல்ல எண்ணத்தை கண்டு அந்த பாய் கடன் வழங்க, பிறகு விவாசயம் செய்ய ஆரம்பிக்கின்றார்.

அந்த சமயத்தில் அந்த ஒட்டகத்திற்கு நம்ம ஊர் உணவு, காலநிலை சரிவராமல் உடல்நிலை சரியில்லாமல் போக, இனி இதை இங்கு வளர்க்க முடியாது, ராஜஸ்தான் சென்று இந்த ஒட்டகத்தை நல்ல இடத்தில் விடவேண்டும் என விக்ராந்த் கிளம்ப, அதன் பின் நடக்கும் சமபவங்களே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விக்ராந்த் விவசாயி கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கின்றார், அவரின் திரைப்பயணத்தில் இது தான் முதல் படம் என்று சொல்லலாம், இதிலிருந்து தான் அவருடைய திரைப்பயணம் தொடங்குகின்றது. ஒட்டகத்தை வைத்துக்கொண்டு அவர் நார்த் இந்தியா முழுவதும் அலையும் காட்சி விக்ராந்த் நடிப்பு நம்மையும் நெகிழ வைக்கின்றது.

அதே நேரத்தில் தன் குழந்தையிடம் அவர் அன்பை காட்டுவது, லேஸ் சிப்ஸை சாப்பிட விடாமல் செய்வது கிடைக்கிற இடத்தில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார், விக்ராந்த் மனைவியாக வரும் வசுந்த்ராவும் பார்த்துப்போன கதாபாத்திரம் என்றாலும் சிறப்பாக நடித்துள்ளார். ஆனால், படத்தின் பிரச்சனையே இது விருது படமா? இல்லை வெகுஜன மக்களுக்கான படமா? என்பதில் குழப்பம் நீடிக்கின்றது.

நேர்கொண்ட பார்வை படத்தில் வரும் மலையாளி போலிஸ் ஒருவர் இதில் விக்ராந்த் நண்பராக வருகின்றார், அவர் முடிந்த அளவு காமெடி செய்ய முயற்சித்தாலும், பெரிதாக சிரிப்பு வரவில்லை, அதுவே பெரிய குறை, படத்தில் இன்னமும் ஹியூமர் காட்சிகள் இருந்திருக்கலாம்.

இரண்டாம் பாதி ஒட்டகத்தை கைப்பற்றும் பசு காவலர்கள், அதை தொடர்ந்து ஒட்டகத்தை தேட ஆரம்பிப்பது என கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தால், அடுத்தடுத்த காட்சிகளில் பெரிய சுவாரஸ்யம் இல்லாமல் போகிறது.

இதற்கு முக்கிய காரணம் அந்த ஒட்டகத்திற்கும் விக்ராந்திற்குமான செண்டிமெண்ட் காட்சிகள் நமக்கு பெரிதும் ஒட்டாமல் போனது தான், இந்தியாவின் பல பகுதிகளை லாரி வழியாகவே ஒளிப்பதிவாளர் சுற்றி காண்பித்துள்ளார். இமான் இசையில் பாடல்கள் மனதில் நின்றாலும், பின்னணி இசை இன்னும் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம்.

க்ளாப்ஸ்

விக்ராந்த் மற்றும் வசுந்தராவின் யதார்த்த நடிப்பு.

ஒரு ஒட்டகத்தை வைத்து இத்தனை அழகாக படப்பிடித்ததே பெரிய விஷயம், அதுவும் போலிஸ் ஸ்டேஷனில் ஒட்டகம் விக்ராந்தை பார்க்குப்படி ஒரு ஷாட், எப்படி தான் எடுத்தார்களோ.

பல்ப்ஸ்

பெரிய திருப்பம் சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை. ஒட்டகத்திற்கான எமோஷ்னல் காட்சிகள் பெரியளவில் செல்ப் எடுக்காதது.

மொத்தத்தில் பக்ரீத் ஆர்ட் ப்லீமிற்கும், கமர்ஷியல் ப்லீமிற்கும் இடையில் சிக்கித்தவிக்கின்றது.