Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெட்ரோமாக்ஸ் திரைவிமர்சனம்

பெட்ரோமாக்ஸ் திரைவிமர்சனம்
review

பெட்ரோமாக்ஸ் திரைவிமர்சனம்

2
Cineulagam

தமன்னா, யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளிவந்துள்ளது பெட்ரோமாக்ஸ் திரைப்படம். தெலுங்கில் டாப்ஸி நடிப்பில் வந்த Anando Brahma என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் இது.

கதை:

மீரா (தமன்னா) தன் தங்கை, அப்பா என சந்தோசமாக வீட்டில் இருக்கிறார். அப்போது அவர்கள் வீட்டில் அமானுஷ்யமான சில விஷயங்கள் நடக்கிறது. பின்னர் தான் தெரியவருகிறது இவர்கள் தான் பேய் என்று. எப்படி இறந்தோம் என தெரியாமலேயே அவர்கள் பேயாக வீட்டில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் தன்னுடைய பெற்றோர் கேரள வெள்ளத்தில் இறந்துவிட்டார்கள் என மலேசியாவில் இருந்து கிளம்பி வருகிறார் பிரேம். பெற்றோர் இறந்துவிட்டதால் அந்த வீட்டை விற்க வேண்டும் என தன் போலீஸ் நண்பரிடம் கூறி சரியான ஆளை அழைத்துவரும்படி கூறுகிறார்.

பார்க்க வருபவர்களுக்கு வீட்டில் தமன்னா பேய் இருப்பது பார்த்து அலறி ஓடுகின்றனர். அதையே காரணமாக வைத்து அடிமாட்டு விலைக்கு வீட்டை விலைபேச நினைக்கிறார் மைம் கோபி. அந்த வீட்டில் நான்கு நாட்கள் தங்கினால் பேய் இல்லை என நிரூபித்துவிடலாம் என்றும், நல்ல விலைக்கு விற்கலாம் என்றும் ஐடியா கொடுக்கிறார் முனிஷ்காந்த்.

காசுக்கு ஆசைப்பட்டு வேறு மூவரை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் செல்கிறார் முனீஸ். அங்கு அவர்கள் பேய்களுடன் செய்யும் கலாட்டா தான் மீதி படம்.

தமன்னா மற்றும் அவரது குடும்பம் எப்படி பேய் ஆனார்கள், கொலை செய்தது யார் போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது கிளைமாக்ஸ்.

பாசிட்டிவ் & நெகட்டிவ்:

வழக்கமான பேய் பட கதை என்றாலும் படத்தில் நம்மை விழுந்து விழுந்து சிரிக்கவைத்தது இரண்டாம் பாதியில் வரும் முனீஸ்காந்த் அண்ட் டீமின் காமெடி கலாட்டா தான். தமன்னா தான் இந்த படத்தின் ஹீரோயின் என கூறப்பட்டாலும் அவரை விட அதிக முக்கியத்துவம் காமெடி டீமுக்கு தான் கொடுத்துள்ளார் இயக்குனர்.

காது கேளாதவராக சத்யன், சினிமா பஞ்ச் வசனம் பேசும் விஜய் டிவி சரவணகுமார், குடித்துவிட்டால் புது ஆளாக மாறிவிடும் காளி வெங்கட் அவர்கள் வரும் காட்சிகளுக்கு தியேட்டர் முழுவதும் சிரிப்பலை தான்.

சற்று நேரமே வரும் யோகி பாபு தன்னுடைய வேலையை குறையில்லாமல் செய்துள்ளார்.

படம் துவங்கி முதல் ஒரு மணி நேரத்திற்கும் மேல் கதைக்குள் செல்லாமல் சுற்றிக்கொண்டிருப்பது பெரிய ஏமாற்றம். இரண்டாம் பாதியில் முனீஸ்காந்த் வந்தபிறகு ஏதோ படத்தை காப்பாற்றுகிறார்.

இருப்பினும் அழுத்தமே இல்லாமல் வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள், சுத்தமாக ஒர்க் அவுட் ஆகாத எமோஷன் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சிகள் என பெட்ரோமாக்ஸ் படத்தில் குறைகள் தான் மிக அதிகம்.