Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆக்ஷன் திரை விமர்சனம்

ஆக்ஷன் திரை விமர்சனம்
review

ஆக்ஷன் திரை விமர்சனம்

2.5
Cineulagam

சுந்தர்.சி தன்னுடைய காமெடி டிராக்கை விட்டு இப்போது இயக்கியிருக்கும் படம் ஆக்ஷன். இந்த படத்தில் விஷாலை வைத்து எப்படிபட்ட ஆக்ஷன் திரைப்படத்தை கொடுத்துள்ளார், இதில் ஜெயித்துள்ளாரா என்பதை பார்ப்போம்.

கதைக்களம்

விஷால் படத்தில் ஆரம்பத்திலேயே தமன்மாவுடன் ஒரு இண்டர்நேஷனல் கிரிமினலை பிடிக்கின்றார். அதை தொடர்ந்து கதை பின்னோக்கி செல்ல, விஷால் மிலிட்டரியில் பெரிய பதவியில் இருக்கிறார்.

அவருடைய அப்பா பழ.கருப்பையா தமிழகத்தின் முதலமைச்சர். விஷாலின் அண்ணன் ராம்கி அடுத்து முதலமைச்சராக தயாராக, இவர்கள் மத்தியில் ஒரு கட்சியுடன் ஒரு கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

அதற்காக அந்த கட்சி தலைவர் தமிழகத்தில் மாநாடு நடத்த, அப்போது ராம்கி நண்பர் மூலமாக ஸ்டேஜில் பாம் வைத்து அந்த கட்சி தலைவரை கொள்கின்றனர்.

இந்த பழி விஷால் குடும்பத்தின் மீது விழ, இதன் உண்மையை அரிய உலகம் சுற்றி வில்லனை பிடிப்பதே இந்த ஆக்‌ஷன்.

படத்தை பற்றிய அலசல்

விஷால் ஒன் மேன் ஷோ என்று சொல்லலாம், படம் முழுவதும் ஓடுகிறார், தாவுகிறார், பறக்கின்றார் என்றாலும் தன் ஆறடி உயரம், துறுதுறு நடிப்பால் அனைத்தையும் நம்ப வைக்கின்றார். அதிலும் இடைவேளை காட்சியில் வரும் சண்டையில் வில்லியை பிடிப்பாரா இல்லையா என்று நமக்கே பதட்டம் கூட்டுகின்றார்.

ஆம், படத்தில் ஒரு வில்லியும் உள்ளார், அசாசின்ஸ் என்று சொல்லப்படும் கூலிப்படையை சார்ந்தவர். அவரும் தன் பங்கிற்கு மிரட்ட, ஹீரோயினாகவும் விஷாலின் காதலியாகவும் வரும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு பெரிதும் நடிக்கும் வாய்ப்பு இல்லை.

ஒவ்வொரு எபிசோடுக்கும் ஒவ்வொரு ஹீரோயின் என்பது போல் ஒரு எபிசோடில் தமன்னா, அவர் விஷாலை ஒரு தலையாக காதலித்தது மட்டுமின்றி அவருக்கு உதவியாகவே இரண்டாம் பாதி முழுவதும் வருகின்றார். சிறப்பாக ஏதும் இல்லை என்றாலும் பாஸ் மார்க் வாங்குகிறார்.

படம் இஸ்தான்புல், அல்கோர்னியா, லண்டன் ஏன் பாகிஸ்தான் வரை பயணிக்கின்றது, கொஞ்சம் விஜயகாந்த், அர்ஜுன் பட சாயல் அடித்தாலும் பிரமாண்ட லொகேஷன், அதிரடி சண்டைக்காட்சிகள் என சுந்தர்.சி ரசிக்க வைத்துள்ளார்.

அதற்காக காதில் பூவிற்கு பதில் பூக்கடையே வைத்தது கொஞ்சம் ஓவர், அதிலும் கிளைமேக்ஸில் பாகிஸ்தான் கவர்மெண்ட் போலிஸிடம் விஷால் தப்பித்தது எல்லாம் சுந்தர்.சியிடம் கேட்டாலே விடை தெரியாது போல.

ஹிப்ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் ஏதும் மனதில் நிற்கவில்லை, பின்னணியில் விட்டதை பிடிக்கின்றார்.

க்ளாப்ஸ்

படத்தின் சண்டைக்காட்சிகள், அதிலும் குறிப்பாக இடைவேளை காட்சி.

படத்தின் ஒளிப்பதிவு பல லொக்கேஷனை அழகாக படம் பிடித்துள்ளனர்.

பல்ப்ஸ்

இஷ்டத்திற்கு பல லாஜிக் மீறல் காட்சிகள்.

படம் ஆரம்பித்து கதைக்குள் செல்லும் வரை கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது.

இரண்டாம் பாதி திரைக்கதை எதை நோக்கி செல்கிறது என தெரியவில்லை, அதிலும் சேஸிங்கில் தமன்னாவுடன் பாட்டு வைத்தது எல்லாம்.

மொத்தத்தில் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் தூளாக இருந்தாலும், இரண்டாம் பாதி எங்கெங்கோ சென்று கொஞ்சம் தலை சுற்ற வைக்கின்றது.