Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மார்க்கெட் ராஜா MBBS திரை விமர்சனம்

மார்க்கெட் ராஜா MBBS திரை விமர்சனம்
review

மார்க்கெட் ராஜா MBBS திரை விமர்சனம்

1.5
Cineulagam

சரண் ஒரு காலத்தில் அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் செம்ம ஹிட் படத்தை கொடுத்துவர். இவர் நீண்ட வருடங்களாக பெரிதும் படம் இயக்காமல் சினிமாவில் இருந்து ஒதுங்கிய இருந்தார், தற்போது பிக்பாஸ் சென்சேஷன் ஆரவ்-வுடன் கைகோர்த்து மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார், சரண் மீண்டும் பழைய பார்முக்கு வந்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

ஊருக்குள் அடி தடி வெட்டுக்குத்துனு செம்ம கெத்தாக உலா வருபவர் மார்க்கெட் ராஜா(ஆரவ்). இவர் ஒரு அமைச்சருக்கு அடியாளாக இருந்து வருகிறார்.

அதே நேரத்தில் மார்க்கெட் ராஜாவை தூக்கினால் தான் நாம் முன்னேற முடியும் என மற்றொரு அமைச்சர் முடிவெடுக்கின்றார். இதற்கிடையில் போலிஸ் இருவரை ஆரவ் பிடித்து வைக்க இனி மார்க்கெட் ராஜவை சும்மவிடக்கூடாது என போலிஸார் என்கவுண்டர் ப்ளான் செய்கின்றனர்.

அப்போது அந்த என்கவுண்டரில் மிகவும் பயந்து சுபாவம் கொண்ட கல்லூரி மாணவர் சுடப்படுகின்றார். அவருடைய ஆவி மார்க்கெட் ராஜா மீது ஏற, அதன் பிறகு நடக்கும் கூத்தே இரனாம் பாதி.

படத்தை பற்றிய அலசல்

ஆரவ் கேங்ஸ்டர் ரோலில் அவர் மட்டுமே தான் கேங்ஸ்டர், தாதா, ரவுடி என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றார், ஆனால் அதற்கான காட்சிகள் படத்தில் இல்லை, ஆனால், ஆரவ் முடிந்த அளவு நடித்துக்கொடுத்துள்ளார்.

படத்தில் ஆரவ் உடம்பிற்குள் ஆவி வரும் வரை படம் எதை நோக்கி செல்கிறது என்று தெரியவில்லை, அதன் பிறகு மட்டும் குறிக்கோளை நோக்கி செல்கிறதா என்று கேட்காதீர்கள், ஏதோ கொஞ்சம் காமெடியாக செல்கிறது.

சரி ஆரவ் உடம்பில் ஆவி புகுந்து காமெடி எமோஷ்னல் கொஞ்சம் நிமிர்ந்து உட்காராலம் என்று பார்த்தால், வில்லன் ஆவி வேறு ஒருவர் உடலில் ஏறுவது ஷப்பா அமரக்களம், ஜெமினி எடுத்த சரண் தானா இது என கேட்க வைக்கின்றது.

அதை விட காட்சிகளுக்காக பெரிதாக மெனக்கெடாமல் வசூல்ராஜா சீனையே அப்படியே எடுத்து வைத்திருப்பது எல்லாம் முடியல.

க்ளாப்ஸ்

ஆரவ் உடலில் ஆவி புகுந்த பிறகு வரும் சில காமெடி காட்சிகள்.

பல்ப்ஸ்

நல்ல ஜாலியான கண்டெண்ட் கிடைத்தும் கோட்டை விட்டுள்ளனர்.

மொத்தத்தில் வசூல்ராஜா எம் பி பி எஸில் இருந்த மார்க்கெட் இப்பொழுது இல்லை என்பது நன்றாக தெரிகிறது.