Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தபங்3 திரை விமர்சனம்

தபங்3 திரை விமர்சனம்
review

தபங்3 திரை விமர்சனம்

2.5
Cineulagam

பாலிவுட்டில் சல்மான் கானுக்கு ஆக்‌ஷன் ஹீரோ என்ற மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றுக்கொடுத்த படம் தபங். இந்த சீரிஸ் முதல் இரண்டு பாகமும் மெகா ஹிட் அடிக்க, தற்போது சல்மான் கான் கதையில் பிரபுதேவா இயக்கத்தில் மூன்றாவது பாகம் வந்துள்ளது, இவை முதல் இரண்டு பாகம் போலவே வெற்றிப்பெற்றதா? பார்ப்போம்.

கதைக்களம்

சுல்புல் பாண்டே வழக்கம் போல் போலிஸ் ட்ரெஸ் போட்ட ஒரு ரவுடி, எப்போதும் தன் ஸ்டைலில் தான் அதிரடியாக பிரச்சனைகளை தீர்த்து வருகின்றார்.

அப்பொழுது ஊரில் பெண்களை வைத்து தொழில் பார்க்கும் ஒரு கும்பலை பிடிக்கின்றார். அந்த கும்பல்களுக்கு தலைவனாக கிச்சா சுதீப் உள்ளார்.

அப்போது யதார்த்தமாக சல்மான் கானை சுதீப் பார்க்க, இருவருக்குமே ஒரு பழைய பகை உள்ளது, அந்த ப்ளாஷ்பேக்கின் சுதீப் சல்மானுக்கு செய்த துரோகத்திற்கும், தற்போது அவர் செய்து வரும் குற்றங்களுக்கும் எடுக்கும் வேட்டையே இந்த தபங்3

படத்தை பற்றிய அலசல்

சுல்புல் பாண்டேவாக சல்மான், அதே கிரேஸ், மேனரிசம், என்பது மட்டுமில்லாமல் ப்ளாஷ்பேக்கில் செம்ம எமோஷ்னலாக நடித்து ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் கொடுத்துள்ளார், சல்மாம் ஒன் மேன் ஷோ தான் தபங்3.

ப்ளாஷ்பேக்கில் மீசை எடுத்துக்கொண்டு தன் காதலியை காதலிப்பது, அவர் இழப்பில் கதறி.அழுவது என நடிக்கவும்.செய்துள்ளார். சுல்புல் பாண்டே பெயர் எப்படி வந்தது, அந்த கண்ணாடி ஸ்டைல் என அனைத்திற்கும் இந்த பாகத்தில் லீட் கொடுத்து காட்டிய விதம் சூப்பர்.

இதை தாண்டி படத்தில் சுதீப் வில்லன் கதாப்பாத்திரம் அவருக்கு கை வந்த கலை, அதிலும் அவருக்கு வரும் பின்னணி இசை மிரட்டல்.

தபங் சீரியஸில் நீங்கள் என்ன எதிர்ப்பார்ப்பீர்கள், ஆட்டம், பாட்டம், சண்டை, எமோஷ்னல், பன்ச் வசனம் தானே இவை அனைத்தும் உள்ளது, அதிலும் நான் தாய் பாலுடன் தமிழ் பாலும் குடிச்சவன் போன்ற தமிழ் டப்பிங் கலக்கல்.

அதே வேலையில் சூப்பர் ஹீரோ கூட தடுமாறுவார், சுல்புல் பாண்டே பல பேரை அடித்து பறக்கவிடுகிறார், என்ன தான் கமர்ஷியல் என்றாலும் ஒரு லாஜிக் வேண்டாமா...?

நம்ம ஊர் ரஜினிகாந்தை எல்லாம் மீறி சல்மான் இன்று வேறு தளத்திற்கு சென்றுவிட்டார், அவர் நடித்தாலே போதும் என்று இஷ்டத்திற்கு பல ஆக்‌ஷன் காட்சிகள் படத்தில் உள்ளது, அதுவும் 50 பேர் வந்தாலும் சரி, 100 பேர் வந்தாலும் சரி இவர் அடித்து தும்சம் செய்வது ஷப்பா..ஆ.

நாம் ஏற்கனவே இங்கு சாமி, சிங்கம் சீரிஸ் என பல போலிஸ் படங்களை பார்த்துவிட்டதால், இது பத்தோடு பதினொன்றாக தான் இருக்கும், ஆனால், பாலிவுட் ரசிகர்களுக்கு சல்மான் கொடுத்த புல் மீல்ஸாகவே இது இருக்கும்.

க்ளாப்ஸ்

சல்மான் கான் ஒன் மேன் ஷோவாக மொத்த படத்தையும் தாங்கி செல்கின்றார், சுதீப்பின் வில்லத்தனம்.

காமெடி காட்சிகள் தமிழிலும் நன்றாக இருந்தது, குறிப்பாக அமைச்சருக்கு PA-வாக வருபவர் செய்யும் காமெடி காட்சிகள்.

பல்ப்ஸ்

பார்த்து புளித்து புளித்து போன மசாலா காட்சிகள். தீவிர கமர்ஷியல் சினிமா ரசிகர்கள் மட்டுமே ரசிக்கும்படியான காட்சிகள்.

மொத்தத்தில் ஆயிரம் குறை இருந்தாலும் இது சல்மான் கானின் தபங், முதல் இரண்டு பாகத்தை கொண்டாடியவர்கள் இதையும் கண்டிப்பாக கொண்டாடலாம்.