Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டாணா திரைவிமர்சனம்

டாணா திரைவிமர்சனம்
review

டாணா திரைவிமர்சனம்

2.25
Cineulagam

சில ஹீரோக்களிடமிருந்து கலகலப்பான படங்களை ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அப்படியான ஒருவர் நடிகர் வைபவ். சென்னை 28 படத்தை தொடர்ந்து அவர் இதை தக்கவைத்து வருகிறார். அவ்வகையில் தற்போது டாணா படம் அவருக்கு வெளியாகியுள்ளது. சரி ஸ்டோரிக்குள் போகலாம்.

கதைக்களம்

ஹீரோ வைபவ் பின் குடும்ப பின்னணி சரித்திர கதை கொண்டது. ஆங்கிலேய ஆட்சியின் போது போலிஸ் துறை ஏற்படுத்தப்பட்டு முதன் முதலாக போலிஸானது இந்த டாணா குடும்பம் தான். இதற்கு ஒரு பெரும் ஃபிளாஷ்பேக் இருக்கிறது.

அந்த பரம்பரையில் வந்த வைபவையும் போலிஸ் ஆக்க வேண்டும் என்பது குடும்பத்தினரின் ஆசை. ஆனால் அவருக்கோ இளம் வயதிலிருந்தே ஒரு பிரச்சனை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் அவர் போலிஸாக கூடாது என வைராக்கியமாக இருக்கிறார்.

இதற்கிடையில் இவர்களின் குலதெய்வம் கோவிலுக்கு அரசங்கத்தால் பிரச்சனை வருகிறது. இதில் உயிர்பலி நிகழ்கிறது. அந்த வேளையில் தன் வைராக்கியத்தை மாற்றிக்கொள்கிறார் வைபவ். ஆனாலும் அவர் போலிஸ் ஆவதை தடுக்கு ஒரு செக் வைக்கப்படுகிறது.

இதற்கிடையில் ஊரில் ஆதரவற்றவர்களாக சொத்துக்களுடன் இருப்பவர்களை குறிவைத்து கொலை செய்து சொத்துக்களை அபகரிக்கும் சதி வேலை நடந்து வருகிறது.

இந்த சம்பவத்தில் தனக்கு தெரிந்த ஒருவரையும் இழக்கிறார் வைபவ். இப்படியான கொலைப்பின்னணியில் இருப்பவர் யார் என ஹீரோ தன் வேட்டையை தொடங்க, குற்றவாளி யார், வைபவுக்கு அப்படி என்ன பிரச்சனை, இறுதியில் போலிஸ் ஆனாரா என்பதே இந்த டாணா.

படத்தை பற்றிய அலசல்

ஹீரோ வைபவ் ஏற்கனவே சொல்லப்பட்டது போல கலக்கலான ஆக்‌ஷன் நிறைந்த போலிஸாக இப்படத்தில் இறங்கியுள்ளார். அவரின் கதை தேர்வு ஓகே தான். ஆனாலும் வேறு மாதிரியான கதைகளை தேர்ந்தெடுத்து அடுத்த லெவலுக்கு போக வேண்டும் என்பதே எல்லோரின் எண்ணம்.

கடந்த படத்தில் அவருக்கு கண் பிரச்சனை, இந்த முறை வாயில் பிரச்சனை. எங்கேயே இடிக்குதே என தோன்றலாம்.

அவருக்கு அப்பாவாக பாண்டியராஜன், அம்மாவாக உமா நடிக்க ஒரு இயல்பான குடும்பம் போல தான். அவரவருக்கு உண்டான கதாபாத்திரத்தை சரியாக கையாண்டுள்ளனர்.

அதே வேளையில் ஹீரோவுக்கு நண்பராக காமெடி நடிகர் யோகி பாபு. அடிக்கும் கவுண்டர் எல்லாம் சிரிப்பு வரவைக்கிறது. ஆங்காங்கே இளைஞர்களுக்கு பிடித்த இரட்டை அர்த்த வசனங்கள் கலந்து அடிக்கிறார். கொஞ்சம் ஃபன். ஆனாலு ஹீரோ அதற்கு ஈடு கொடுக்கவில்லை என தெரிகிறது.

வைபவுக்கு ஹீரோயினாக நந்திதா ஸ்வேதா, ஹீரோவை பார்த்தமாத்திரத்திலேயே காதல் கொள்வதும், விரட்டி விரட்டி காதல் செய்வதும் பெரிதாக எடுபடவில்லை. ரொமான்ஸ் பாடல்களும் இல்லை.

வில்லனாக ஹரீஷ் பெரடி இப்படத்திலும் ஒரு சைலண்ட் கில்லர் போல தான். அந்த பார்வையே வில்லனாய் அவரை சித்தரிக்கிறது. அதிகம் பேச வேண்டியதில்லை.

பாரம்பரிய கதையை தொட்டும், இக்காலத்தில் நவீன முறையில் டேட்டா பேஸ், டேட்ட எக்சேஞ் என தனிமனித ரகசிய தகவல்களை திருடி குற்றத்திற்கு துணை போகும் ஏஜென்சிக்களை பற்றியும், சொத்துக்களை அபகரிக்கும் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

அதே வேளையில் முதல் பாதியில் இயக்குனர் சற்று தேவையில்லாத காட்சிகளை சேர்த்து விட்டரோ என்ற கேள்வி. படத்தின் நேரத்தை சற்று குறைத்திருக்கலாம்.

இன்னும் கதைக்கு அழுத்தம் கொடுத்தால் சிறந்த படைப்பை கொடுக்க முடியும் என கவனத்தில் கொள்ள வேண்டுமே.

வேல ராமூர்த்தி எண்ட்ரி, தன்னம்பிக்கை எழுப்பும் பாடல் ஓகே ரகம்.

கிளாப்ஸ்

சோலா காமெடியாக யோகி பாபுவின் காமெடி காட்சிள் சிரிப்புக்கு ஓகே.

வைபவுக்கான கதை ஓகே. நடிப்பும் ஸ்மார்ட் தான்.

பல்பஸ்

ஹீரோ, ஹீரோயின் கெமிஸ்ட்ரி மிஸ் மேட்ச்.

வேல ராமமூர்த்தி, பாண்டியராஜன் காட்சி சம்மந்தமில்லாமல் இருந்தது போன்ற ஒரு ஃபீல்.

மொத்தத்தில் டாணா ஓகே.