Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் திரைவிமர்சனம்

பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் திரைவிமர்சனம்
review

பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் திரைவிமர்சனம்

3.5
Cineulagam

பழைய கொண்டாட்ட கூட்டணி மீண்டும் கலக்கியதா ? இதோ பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் விமர்சனம்.

கதை

முதல் பாகத்தில் மைக் மற்றும் மார்கஸ் எனும் இரு கருப்பின இளைஞர்கள் மியாமி போலீஸ் படையில் பல கலாட்டகள் செய்து கலக்குவது தான் கதை. பல வருடங்கள் கழித்து வம்திருக்கும் இந்த பாகத்தில் மார்கஸ்ஸிற்கு பேரன் பிறக்க, அவர் வேலையிலிருந்து ஓய்வெடுக்க நினைக்கிறார். இதை மைக் மறுக்கிறார். நம் கூட்டணி பிரியக்கூடாதென்கிறார். இந்த நிலையில் பழைய கேஸ் ஒன்றின் பழிவாங்கலுக்காக மைக் நடுத்தெருவில் சுடப்படுகிறார். இதனால் மொத்த டிபார்ட்மெண்டும் ஆடிப்போகிறது. மைக்கை யார் சுட்டார்கள் எதற்காக சுட்டார்கள் என்பதை பேட் பாய்ஸ் கூட்டணி துப்பறிகிறது. இது தான் கதை

விமர்சனம்

மைக்காக வில் ஸ்மித், மார்கஸாக மார்டின் இந்த இருவரின் கலக்கலான கெமிஸ்ட்ரிதான் இந்த மொத்த படத்தொடரையும் சுவாரஸ்யம் ஆக்கியது. இந்த பாகத்திலும் இந்தக் கூட்டணி சோடை போகவில்லை. காமெடி ஆக்‌ஷன் என அனைத்திலும் கலக்கியிருக்கிறது. மெதுவாக ஆரம்பிக்கும் படம் மைக் சுடப்படும் இடத்திலிருந்து ஜெட் வேகமெடுக்கிறது. மைக், மார்கஸ் கூட்டணி அடிக்கும் கூத்துகள் பார்ப்பதற்கு படு சுவார்ஸ்யம். அதிலும் விமான பயணத்தில் மார்கஸ் அடிக்கும் கமெண்ட்கள் தியேட்டரில் வெடிச்சிரிப்பை ஏற்படுத்துகிறது. இருவருக்கும் இந்தப்படத்தில் உள்ள கெமிஸ்ட்ரி படத்தில் மிக அழகாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. முழுப்படத்தையும் போரடிக்காமல் கொண்டு போவது இந்தக்கூட்டணிதான். இவர்களுடன் ஒரு துப்பறியும் குழுவும் படம் முழுக்க வருகிறார்கள் அவர்கள் ஆக்‌ஷன் காட்சிகளில் சரியாக ஒத்துழைத்துள்ளார்கள். படத்தில் ஏன் மைக் சுடப்பட்டார் என சொல்லப்படும் டிவிஸ்ட் ஒரு ஆச்சர்யம். அந்த டிவிஸ்ட் படத்திற்கு பெரிய பலம். அடுத்த பாகத்திற்கும் இறுதுயில் அடி போட்டிருக்கிறார்கள். மைக், மார்கஸ் கூட்டணியை மீண்டும் எதிர்பார்க்கலாம்.

படம் மியாமி, மெக்ஸிகோ என கண்ணை கவரும் லோகேஷன்களில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. வில் ஸ்மித் இன்னும் இளமையாக இருக்கிறார். அதிரடியாக சண்டை போடுகிறார். போலீஸ் ஆப்பரேஷனில் புகுந்து அவர் செய்யும் ஆக்‌ஷன் காமெடியாக மாறுவது கலக்கல். மார்ஸாக வரும் மார்டின் தன் பங்கிற்கு நடிப்பில் கலக்கியுள்ளார். படம் முழுக்க நம்மை சிரிக்க வைக்கிறார். எந்த குழப்பமும் இல்லாத தெளிவான திரைக்கதை ஆச்சர்ய டிவிஸ்ட் என படம் அசரடிக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு வில் ஸ்மித்திற்கு ஒரு அட்டகாசமான ஹிட் படம்.

ப்ளஸ் - பரபர திரைக்கதை, வில் ஸ்மித், மார்டின் காமெடி, கண் கவர் ஆக்‌ஷன்.

மைனஸ் - பலமில்லாத வில்லன், ஸ்மித், மார்டின் தவிர மற்ற கேரகடர்களுக்கு முக்கியத்துவம் இல்லாதது.

இறுதியாக - பாலிவுட் ஆக்‌ஷன் பட விரும்பிகளுக்கு விருந்து. ஒரு நல்ல ஆக்‌ஷன் காமெடி படம் பார்க்க விரும்பினால் தாராளமாக பேட் பாய்ஸை தரிசித்து வரலாம்

loading...