Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் சிரித்தால் திரை விமர்சனம்

நான் சிரித்தால் திரை விமர்சனம்
review

நான் சிரித்தால் திரை விமர்சனம்

2.5
Cineulagam

2கே கிட்ஸுகளின் பேவரட் இசையமைப்பாளர் என்றால் அது ஹிப்ஹாப் ஆதி தான். இன்றைய இளைஞர்களைன் பல்ஸ் பிடித்து ஹிட் அடிப்பதில் வல்லவர். இவர் இசை மட்டுமின்றி நடிப்பிலும் கலக்கி வருகின்றார், மீசைய முறுக்கு, நட்பே துணை என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த இவர் நான் சிரித்தால் மூலம் ஹாட்ரிக் அடித்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

ஹிப்ஹாப் ஆதி படத்தின் ஆரம்பத்திலேயே வினோத மனிதர்கள் என்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கின்றார். அதில் தன் வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை ஒவ்வொன்றாக பகிர்கின்றார்.

ஆம், ஆதிக்கு எந்த ஒரு சோகமோ, வலியோ எது என்றாலும் உடனே சிரிப்பு வந்துவிடும், இந்த சிரிப்பால் தன் காதலியை இழக்கின்றார், தன் வேலையை இழக்கின்றார்.

அந்த நேரத்தில் தன் நண்பர் டெல்லி பாபு தொலைந்து போன தகவல் அறிந்து ஆதி அவரை தன் மற்ற நண்பர்களுடன் இணைந்து தேட ஆரம்பிக்கின்றார், அப்போது அதே ஏரியாவில் இருக்கும் டான் டெல்லி பாபுவை(கே.எஸ்.ரவிகுமார்) கொலை செய்ய ஒரு கும்பல் திட்டமிடுகின்றனர்.

இந்த திட்டத்தில் தவறுதலாக ஆதி, ரவிகுமார் இருக்கும் இடத்திற்கு செல்ல, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படத்தி பற்றிய அலசல்

அறிமுக இயக்குனர் ராணா தான் இயக்கிய குறும்படம் கெக்க பெக்க-வை அடிப்படையாக கொண்டு முழுத்திரைக்கதை அமைத்து நான் சிரித்தால் கதையை உருவாக்கியுள்ளார், இதற்காக இவர் தேர்ந்தெடுத்த நடிகர்கள் தான் ஹைலேட்.

எல்லோருமே படத்தில் நன்றாக நடித்துள்ளனர், ஹிப்ஹாப் ஆதி வழக்கமான தன் துறுதுறு நடிப்பால் அசத்த, அவருக்கு அப்பாவாக வரும் படவா கோபி லோக்கல் அப்பாவாக இறங்கி அடிக்கின்றார்.

அதேபோல் வில்லனாக கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ரவிமரியா, இருவருமே காமிக் வில்லன் என்று சொல்லலாம், இதில் ரவிமரியா தான் ஸ்கோர் செய்கின்றார், அதிலும் கிளைமேக்ஸில் அவர் சிலை போல் இருக்கும் காட்சி சிரிப்பிற்கு கேரண்டி.

ஆனால், ஒரு வித்தியாசமான நோய், கிட்டத்தட்ட நம்ம ஹாலிவுட்டில் வந்த ஜோக்கர் படத்தை செம்ம ஜாலியாக எடுத்தால் எப்படியிருக்கும் என்ற வெர்ஷன் தான் என்றாலும், படத்தில் பாதி நேரம் ஆதி மட்டுமே சிரித்துக்கொண்டு இருக்கின்றார். ரசிகர்களிடமிருந்து பெரியளவில் சிரிப்பு வரவில்லை என்பது தான் கவலை.

குறும்படமாக பார்க்க சூப்பராக இருந்தது, அதை முழுப்படமாக எடுக்கையில் வரும் ஒரு சில பிரச்சனைகள் தான் இப்படத்தின் மைனஸ், அதிலும் முனிஷ்காந்த் வந்துவிட்டார் இவர் சிரிக்க வைத்து விடுவார், ஷாரா வந்துவிட்டார் இவர் சிரிக்க வைத்துவிடுவார் என பார்த்து பார்த்து 10க்கு 3 காமெடி காட்சிகளே ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

கிளைமேக்ஸ் சுந்தர்.சி தயாரிப்பாளர் என்பதால் அவர் படத்திலிருந்தே காட்சிகளை எடுத்துவிட்டார்கள் போல, சுந்தர்.சி கிளைமேக்ஸ் போல் எல்லோரும் ஒரு இடத்திற்கு வர, ஒவ்வொருத்தர் ஒவ்வொன்றை தேடி வர, அங்கு நடக்கும் குழப்பம், கலாட்டா போன்றவை தான் ரசிக்க வைக்கின்றது. இவை படம் முழுவதும் இருந்திருக்க வேண்டும் அல்லவா..?.

ஹிப்ஹாப் ஆதி எப்போதும் தன் படம் என்றாலே பாடல்களில் மிகவும் கவனம் செலுத்துவார், ஆனால், இதில் ப்ரேக் அப் சாங், நான் சிரித்தால் தவிர மற்ற அனைத்தும் தேவையில்லாத ஆணியாக இருக்கின்றது, வாஞ்சிநாதன் ஒளிப்பதிவு செம்ம கலர்புல். எடிட்டர் இன்னும் கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாம்.

க்ளாப்ஸ்

படத்த்தின் கான்செப்ட், ஆதி தன்னால் முடிந்த அளவிற்கு நன்றாக நடித்துக்கொடுத்துள்ளார்.

2கே கிட்ஸை கவரும்படியான வசனங்கள், கிளைமேக்ஸ் காட்சிகள்

பல்ப்ஸ்

படத்தின் முதல் பாதி ஒரு கட்டத்திற்கு மேல் எப்போது இடைவேளை என்று கேட்க வைக்கின்றது.

ரவிகுமார், ரவிமரியா போன்ற நடிகர்களை இன்னமும் பயன்படுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் நான் சிரித்தால், கிளைமேக்ஸில் இருந்த கலகலப்பு படம் முழுவதும் இருந்திருக்கலாம்.

loading...