Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வால்டர் திரைவிமர்சனம்

வால்டர் திரைவிமர்சனம்
review

வால்டர் திரைவிமர்சனம்

2
Cineulagam

போலிஸாக பல ஹீரோக்கள் நடித்து வருகிறார்கள். அதில் சிலரின் வேடம் மனதில் அப்படியே நிலைத்து நின்றுவிட்டது. அதிரடி கதைகளோடு களத்தில் இறங்கும் ஒரு சிலரே அப்படி மனதில் இடம் பிடிக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் சிபி சத்யராக் களத்தில் இறங்கியுள்ளார். தன் அப்பா படமான வால்டர் வெற்றிவேல் என்பதிலிருந்து வால்டராக வந்திருக்கிறார். வாருங்கள் வால்டரை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கதைக்களம்

படத்தின் ஹீரோ சிபிராஜ் உதவி காவல் கண்காணிப்பாளாராக வேலை செய்கிறார். கும்பகோணத்தில் பெரும் அரசியல் வாதியாக ஈஸ்வரமூர்த்தி என்பவர் இருக்கிறார். அவரின் மகளாக ரித்விகா, மருமகனாக தொழிலதிபராக அபிஷேக் வினோத்.

ஈஸ்வர மூர்த்திக்கு வலது கை போல சமுத்திரகனி. சமுத்திரகனியின் நண்பராக வரும் டாக்டராக இருக்கும் நட்டி நடராஜ் திடீரென மருத்துவ கவுன்சிலால் பதவி நீக்கம் செய்யப்பட்டதால் தலைமறைவாகிறார்.

இதற்கிடையில் சமுத்திரக்கனி சுட்டுக்கொல்லப்படுகிறார். இந்த சம்பவங்களுக்கிடையில் ஊரில் மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தைகள் கடத்தப்படுகின்றன.

காணாமல் போன குழந்தைகள் சம்மந்தப்பட்ட பெற்றோரின் புகாரால் மீட்கப்பட்ட போதும் அடுத்த நாளே உயிரிழந்து விடுகின்றன.

இந்த சம்பவம் குறித்து விசாரணையில் ரத்தம் சம்மந்தபட்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன. இறங்க சிபிராஜ் மற்றும் அவரின் காதலி ஷிரினுக்கு வாகன விபத்து. இந்த சம்பவத்தில் இருவரும் உயிர் பிழைத்தார்களா, சமுத்திரகனியின் கொலைக்கு காரணம் என்ன, நட்டிக்கு ஏன் தலைமறைவாக வேண்டும், குழந்தை கடத்தல் எதனால் என்பதன் பின்னணியே இந்த வால்டர்.

படத்தை பற்றிய அலசல்

சிபிராஜ் வாரிசு நடிகர் என அனைவரும் அறிவார்கள். ஆனால் அவருக்கான ஒரு நல்ல மார்க்கெட் எப்போது உருவாகும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. இந்த படத்தில் வால்டர் போலிஸாக அவர் அதிரடி காட்ட முயற்சிக்கிறார். ஏற்கனவே அவர் நாய்கள் ஜாக்கிரதை படத்தில் போலிசாக வந்திருந்தாலும் இப்படத்தில் அவரின் பாடி லாங்குவேஜ் செயற்கையாக தெரிகின்றன. அடிக்கடி மீசையை திருகுவதும், பெல்டை சரி செய்வதும் ரியலில் இருந்து சற்று வித்தியாசப்படுகிறது.

ஹீரோயினை எங்கோ பார்த்தது போலவே இருக்கிறதே என யோசித்த போது நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு படம் நினைவிற்கு வருகிறது. ஹீரோவை துரத்தி துரத்தி காதலிப்பது மனதை ஈர்க்கவில்லை. இருவரும் வரும் ரொமான்ஸ் பாடல் கதையிலிருந்து டேக் டைவர்சன் என்பது போல தான்.

டாக்டர் நட்டி அனுபவமான தன் நடிப்பை வெளிப்படுத்தினாலும் சட்டென வில்லனாவதும், ஹீரோயிஸம் செய்வதும் கொஞ்சம் ட்விஸ்ட்.

சார்லி காவல் உதவியாளராக வந்திருந்தாலும், பாஸ்க்கு சல்யூட் அடிப்பது டிராமா போல தெரிகிறது. இடையில் பார்த்த ஃபைலையே மீண்டும் மீண்டும் புரட்டுவது கொஞ்சம் போர்.

பிக்பாஸ் சீசன் 2 வின்னர் ரித்விகாவை இப்படத்தில் பார்க்க முடிந்தது. தங்கள் திறமைக்கு இன்னும் சவால் கொடுக்கும் கதைகளை செலக்ட் பண்ணலாமே ரித்து.

இடையில் திடீரென கவர்ச்சியான தோற்றத்தில் சனம் ஷெட்டி உள்ளே வந்து போவது என்ன இது இப்படி என்ற கேள்வியை கேட்கிறது.

இயக்குனர் அன்பரசன் படத்தில் முதல் பாதி குறித்த சரிவர திட்டமிடல் இல்லையோ, எடிட்டிங் இன்னும் பக்காவாக இருந்திருக்கலாம், நீண்ட காட்சிகள் என சில திருப்தியற்ற மனநிலையை உருவாக்கிவிட்டாரோ என்ற ஃபீல்.

கிளாப்ஸ்

பாம்பே குருப் என்ற புதுவகையான மருத்துவ ஊழலை முன்னுக்கு வைத்தது.

கிளைமாக்ஸ் ஓர்க் ஓகே..

பல்பஸ்

லாஜிக் இல்லா காட்சிகள் நிறைய...

எடிட்டிங் ஷார்ப் மிஸ்ஸிங்...

மொத்தத்தில் வால்டர் மருத்துவத்துறையில் புதியவித மோசடி ஊழலை கோப்பாக்கியுள்ளது. வால்டரை இன்னும் Bolder ஆக்கியிருக்கலாமே. அடுத்த படைப்பில் இன்னும் எதிர்பார்க்கிறோம்....