Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Bloodshot திரைவிமர்சனம்

Bloodshot திரைவிமர்சனம்
review

Bloodshot திரைவிமர்சனம்

2.75
Cineulagam

ஹாலிவுட் நடிகர், Vin Diesel, ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் மூலம் உலகமெங்கும் புகழ் பெற்றவர். இந்தியாவிலும் பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட ஒரு நடிகர். அவரது நடிப்பில் ஹாலிவுட் ஆகஹன் அதிரடி படம் தான் Bloodshot

கதை களம்

Valiant Comics ஐ மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் தான் Bloodshot. Kevin VanHook, Don Perlin மற்றும் Bob Layton. படக்கதையை Jeff Wadlow எழுத, Jeff Wadlow மற்றும் Eric Heisserer ஆகிய இருவரும் படத்தின் திரைக்கதையை வடிவமைத்துள்ளனர். திரையில் வடிவெடுத்துள்ள Valiant Comics-இன் முதல் பதிப்பு இது.

ராணிவத்தில் வேலை பார்க்குக் எதிர்பாராதவிதமாக Garrison (Vin Diesel) ஒரு சீக்ரெட் ஆப்பரேஷனுக்கு பிறகு அவரும் மற்றும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்படுகின்றனர்.

சில விஞ்ஞானிகள், நவீன Nano technology-இன் அடிப்படையில் Garrison (Vin Diesel) ஐ மறுபிறவி எடுக்க வைக்கின்றனர், முழுக்க முழுக்க உடலில் நானோ டெக்னாலஜி பரவியிருக்க அவர் ஒரு ஆபத்தான கருவியாக இருக்கிறார்.

பழைய நினைவுகள் நெஞ்சில் இல்லாமல் போக, நாளடைவில் நினைவலைகள் மீண்டு வருகிறது, உடனே மனைவியை கொன்றவரை பழிவாங்க கிளம்புகிறார். அதனை தொடர்ந்து பல ரகசியங்கள் வெளிவருகிறது. அவரை எதற்காக உருவாக்கினார்கள் உண்மையில் என்ன நடக்கிறது பிரமாண்ட ஆக்‌ஷன் கலந்து சொல்லியுள்ளார்கள்

படத்தை பற்றிய அலசல்

Vin Diesel என்றாலே ஆக்‌ஷன் தான் அது இந்தப்படத்திலும் பொய்க்கவில்லை ஆரம்பம் முதல் இறுதி வரை ஆக்‌ஷன் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. எப்போதும் அவரை ஒரு மெகா கூட்டணியுடன் பார்த்து விட்டு இதில் தனியே பார்க்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. படத்தின் பெரும் பலம் அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் தான். வெறும் பழிவாங்கலாக இல்லாமல் நாம் எதிர்பார்க்காத வகையில் கதையை திருப்பியது சூப்பர். ஆனால் படம் முழுதிலும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உலகில் நுழைந்தது போல் டெக்கியாக இருக்கிறது.

நிஜ அடிதடி சண்டைகள் குறைவாக இருப்பது போல் தோன்றுகிறது. Vin Diesel வழக்கம் போல் பிரமாண்ட உடல்கட்டுடன் ஆகஹன் காட்சிகளில் கலக்கியிருக்கிறார். இறுதி சண்டைக்காட்சி அமர்க்களம். பாலத்தில் அடியில் நடக்கும் சண்டைக்காட்சி அதிர்கிறது. ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு விருந்து. தொடர்ச்சியாக சண்டைக்காட்சிகளே வந்து கொண்டு இருக்கிறது. காமெடி எதுவும் படத்தில் சுத்தமாக இல்லாதது ஏமாற்றம்.

Vin Diesel தவிர்த்து வேறு யாருமே படத்தில் மிளிரவில்லை. லாஸ் ஏஞ்சிலஸ் நகரில் வாழும் தமிழரரான சித்தார்த் தனஞ்சய் Eric என்கிற ஒரு கதாபாத்திரத்தில், கணிப்பொறி வல்லுநராக இப்படத்தில் நடித்துள்ளார். கதையை இன்னும் கொஞ்சம் காமெடி கலந்து கமர்ஷியலாக சொல்லியொருந்தால் நிறைய ரசித்திருக்கலாம். ஆக்‌ஷன் ரசிகர்கள் விரும்பி பார்க்கலாம்.

க்ளாப்ஸ்

Vin Diesel தோற்றம் அவரது அதிரடி ஆக்‌ஷன். முதல் பாதியின் எதிர்பாரா திருப்பம்

பல்ப்ஸ்

படம் முழுக்க Vin Diesel மீது மட்டுமே பயணிப்பது. டிஜிட்டல் கிராபிக்ஸ் ஒவர் டோஸானது. காமெடி இல்லாதது.

மொத்தத்தில் Vin Diesel ஐ ரசிக்கும் ஹாலிவுட் ஆக்‌ஷன் விரும்பிகளுக்கான படம்

loading...