Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே நாளில் மோத போகும் சிம்பு, தனுஷ்- பதற்றத்தில் ரசிகர்கள்

தனுஷ், சிம்பு இருவரும் தமிழ் சினிமாவில் போட்டியாளர்களாக ரசிகர்களால் கருதப்படுபவர்கள். ஆனால் இவர்களுக்குள் எந்த போட்டியும் கிடையாது.

தற்போது தனுஷின் தொடரி படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அவரது கொடி படத்தின் இசை வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஆடியோ வரும் அக்டோபர் 5ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.

அதேசமயம், சிம்பு நடித்துவரும் AAA படத்தில் இடம்பெறும் மதுரை மைக்கேல் வேடத்தின் டீஸர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த டீஸரும் வரும் 5ம் தேதி தான் வெளியாகும் என கூறப்படுகிறது.