Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெங்கட்பிரபு டீம், விஜய் ஆண்டனி சென்னை வசூலில் யார் டாப்

பல வருடங்களுக்கு பின்னர் கைநழுவிய இடத்தை மீண்டும் 'சென்னை 28 II' படம் மூலம் பெற்றுள்ளார் வெங்கட் பிரபு. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப்படம் விமர்சனங்களுக்குள்ளான நிலையில் நல்ல வசூலை அள்ளி வருகிறது.

சென்னையில் 22 திரையரங்களில் 336 காட்சிகள் திரையிடப்பட்டு 1 கோடி 21 இலட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது. மேலும் கடும் மழையிலும் திரையரங்கில் ரசிகர்கள் குவிந்தவண்ணமே உள்ளனர்.

மேலும் கடந்த 1 ஆம் தேதி வெளியாகி சிறந்த வரவேற்பினை பெற்ற விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' படம் 2 ஆவது வாரமாகவும் சிறந்த நிலையில் தான் உள்ளது.

கடந்த வாரம் மட்டும் 155 காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டிருந்த நிலையில் 29 இலட்சம் ரூபாய் வரை வசூல் செய்திருந்தது. ஆனால் 1 ஆம் தேதி வெளியான இந்த படம் முதல் 11 நாட்களில் மட்டும் 2 கோடி 1 இலட்சம் வரையில் வசூல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

loading...