பைரவா படத்தை தொடர்ந்து விஜய், அட்லீயுடன் இரண்டாவது முறையாக இணைந்து தன்னுடைய 61வது படத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாகவும், ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பாளராகவும் கமிட்டாகியுள்ளனர். இந்நிலையில் விஜய்யுடன் நண்பன், துப்பாக்கி போன்ற படத்தில் நடித்த காமெடி நடிகர் சத்யன் இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் திரைக்கதையை பாகுபலி புகழ் விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.