Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் நாயகி இவரா?

வித்தியாசமான வேடம், கதை என்று கூறினால் போதும் உடனே அதற்கான வேலைகளில் இறங்கி விடுவார் விக்ரம்.

தற்போது மிகவும் மாறுபட்ட கதைக்களத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் துருவ நட்சத்திரம்.

இப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி படம் எப்படிபட்ட கதை என்று ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது. இந்நிலையில் படத்தின் நாயகியாக தெலுங்கு பட நாயகி ரீது வர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பெல்லிசூப்புலு என்ற தெலுங்கு படத்தின் மூலம் பிரபலமடைந்த ரீது வர்மா துருவ நட்சத்திரம் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.