Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் விவேகம் படத்தில் இவர்களும் நடிக்கிறார்களா?

அஜித்தின் விவேகம் பட படப்பிடிப்பு பல்கேரியாவில் கடும் பனியில் நடந்து வருகிறது. அண்மையில் அஜித் கையில் துப்பாக்கியுடன் பனி பிரதேசத்தில் இருப்பது போல் ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது படத்தை பற்றிய சில தகவல் வந்துள்ளது. அதாவது படத்தில் ஐரோப்பாவை சேர்ந்த சில நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் படக்குழுவினர் சிலர் படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே படத்தின் எதிர்ப்பார்ப்பை உச்சத்தில் இருக்கிறது. படக்குழுவின் அடுத்த அறிவிப்பு நம்மை எப்படி ஆச்சரியப்படுத்துகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.