Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

100வது நாள் கொண்டாட்டத்தில் விஜய்யின் வெற்றி படம்

விஜய்யின் படங்கள் 100வது நாள் தாண்டி வெற்றிகரமாக ஓடுவது வழக்கம் தான். இவர் நடித்த கத்தி படம் தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் கைதி No. 150 என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

வி.வி. வினாயக் இயக்க, சிரஞ்சீவி, காஜல் அகர்வால் நடித்திருந்த இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஜனவரி 11ம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்திருந்தனர்.

சிரஞ்சீவியின் மகன் ராம் சரண், லைகா புரொடக்ஷன் இணைந்து தயாரித்திருந்த இந்த பிரம்மாண்ட படம் வெளியாகி இன்றோடு 100 நாள் ஆகிறது. இதனால் கொண்டாட்டத்தில் இருக்கும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #100DaysForKhaidiNo150 என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.