Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை

சிறு பட்ஜெட் படங்கள் ஒருபக்கம் அதிகம் வந்தாலும் பெரிய பட்ஜெட் படங்களும் அதிகம் வருகிறது.

அண்மையில் மலையாள சினிமா நடிகர் மோகன்லால் ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் மகாபாரதம் என்ற படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தது. ரெண்டாம்மூழம் என்ற நாவலை தழுவிய இந்த கதை பீமனை அடிப்படையாக கொண்ட படமாம்.

இந்த படம் 1000 கோடி ரூபாய்க்கு பதில் 10,000 கோடி ரூபாய்க்கே எடுக்கலாம் என சங்க் பரிவார் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ரெண்டாம்மூழம் நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்படவுள்ளதால், இதற்கு மகாபாரதம் என தலைப்பு வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாபாரதத்தில் சொல்லப்படாத வேறு தவறான கருத்தை படத்தில் புகுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளா சங்க பரிவார் அமைப்பு எச்சரித்துள்ளது.