Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓமன் நாட்டில் உதயநிதி பட இயக்குனருக்கு கிடைத்த வரவேற்பு

தூங்கா நகரம், சிகரம் தொடு போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் கௌரவ் நாராயணன். இவர் லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உதயநிதி நடிக்க இப்படை வெல்லும் என்ற படத்தை இயக்கிவருகிறார்.

அண்மையில் படக்குழு ஓமன் நாட்டில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். இதனை அறிந்த ஓமன் நாட்டின் தகவல் துறை அமைச்சர் மர்வான் யூகப் இயக்குனர் கௌரவ் நாராயணனை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். அப்போது படத்தின் பாடல் காட்சிகளை பார்த்த ஓமன் நாட்டின் அமைச்சர் இயக்குனர் கௌரல் நாராயணன் மற்றும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

மஞ்சிமா மோகன் நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.