Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மே 1 தல அஜித் பிறந்தநாள்- பிரபல தொலைக்காட்சி போட்ட அதிரடி திட்டம்

இந்த வருடம் தல அஜித் பிறந்தநாள் அதிரடி சரவெடியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வழக்கம் போல அவரது ரசிகர்கள் அவரது பிறந்தநாளை மாஸாக கொண்டாட திட்டம் போட்டுள்ளனர்.

அதே நேரத்தில் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் விவேகம் படத்தின் டீஸர் வெளியாக இருக்கிறது. ஒரு பாடல் டீஸரும் வெளியாக இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி மே 1ம் தேதி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக அன்று மட்டும் அஜித்தின் ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் என மூன்று படங்களை திரையிட திட்டமிட்டுள்ளனர்.

ஸ்பெஷல் மேல் ஸ்பெஷல் விஷயங்கள் நடக்க இருப்பதால் எப்படி அஜித் பிறந்தநாளை கொண்டாடுவது என திணறியிருக்கின்றனர் ரசிகர்கள்.