Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷின் வட சென்னை என்ன ஆனது- அவரே கூறிய தகவல்

ஹாலிவுட் படத்தையும் தாண்டி தனுஷே எதிர்ப்பார்க்கும் ஒரு பெரிய படம் வட சென்னை. வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கவில்லை.

அண்மையில் ஒரு பேட்டியில் தனுஷிடம் வட சென்னை படம் பற்றி கேட்டபோது, இந்த படத்தில் இன்னும் 15 நாள் படப்பிடிப்பு மட்டும் மீதம் உள்ளது. வெற்றிமாறன் விசாரணை ஆஸ்கருக்கு தேர்வானதால் அந்த வேலையில் இருக்க, நானும் மற்ற படங்களின் படப்பிடிப்பை முடித்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்தேன். இதனால் தான் படப்பிடிப்பு தள்ளிப்போனது.

எடுத்த வரைக்கும் படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. என்னுடைய இந்த ஹாலிவுட் பட படப்பிடிப்பு வேலைகள் முடிந்ததும் வட சென்னை படப்பிடிப்பை தொடங்குவோம் என்றார்.