Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கண்ணீர் விட்ட இயக்குனர் கண்ணனுக்காக முன்வந்த பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் GST வரி வந்ததில் இருந்து நிறைய பிரச்சனைகள் ஆரம்பமாகி இருக்கிறது. இதற்கு நடுவில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இவன் தந்திரன் படம் ஒரு நல்ல கதைக்களத்தை கொண்டு வெளியாகியுள்ளது.

படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வரும் நிலையில் திங்கட்கிழமை முதல் திரையரங்குகள் மூடப்படும் என அறிவிப்பு வந்திருக்கிறது. இதனால் இவன் தந்திரன் பட இயக்குனர் கண்ணன் படம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஸ்ட்ரைக் என்று சொன்னால் நான் வாங்கிய கடன் எல்லாம் எப்படி அடைப்பேன் என்று கண்ணீர் மல்க பேசியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் ஷாந்தனு படத்தை பார்த்துவிட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அனைவரும் திரையரங்கிற்கு வந்து இவன் தந்திரன் படத்தை பாருங்கள் மிகவும் அற்புதமான கதை என்று கூறியுள்ளார். முடிந்த அளவிற்கு திரையரங்குகிற்கு வந்து பாருங்கள். நானும் ஒரு ஐந்து பேருடன் படத்தை பார்த்தேன் என்றார்.