Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் VTV பட திரிஷா ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல்

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் வெற்றி பெற்ற படம் விண்ணை தாண்டி வருவாயா. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்று ரசிகர்கள் பலரும் எதிர்ப்பார்த்தனர், ஆனால் படக்குழுவிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

இந்த நிலையில் திரிஷாவுக்கு VTV பட வேடத்தை போல ஒரு பட வாய்ப்பு வந்திருக்கிறது. திரிஷா, நிவின் பாலியுடன் இணைந்து நடிக்கும் முதல் மலையாள படம் ஹேய் ஜுட். இப்படத்தில் திரிஷா மலையாள கிறிஸ்துவ பெண் வேடத்தில் நடித்து வருகிறாராம்.

முழுக்க முழுக்க ரொமான்ஸ் படமான இந்த படத்தில் கிட்டத்தட்ட VTV ஜெஸ்ஸி போலவே த்ரிஷாவின் கேரக்டர் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.