Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமாவுக்காக அஜித் இதை ஒப்புக் கொள்வாரா- விவேகம் படம் எப்படி வரப்போகிறது

சினிமாவில் அடுத்து வெளியாக போகும் முன்னணி நடிகரின் படம் என்றால் அது அஜித்தின் விவேகம் தான். தற்போது தமிழ் சினிமாவில் மாநில வரிப் பிரச்சனையால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கிறது.

சினிமா குழுவினர் திரையரங்கை தாண்டி டிடிஎச் மூலம் படத்தை வெளியிட யோசித்து வருகிறார்களாம். சாதாரண நடிகர்களின் படங்களை அதில் வெளியிட்டால் மக்களுக்கு தெரியாது என்பதால் அடுத்து வெளியாக இருக்கும் முன்னணி நடிகரான அஜித்தின் விவேகம் படத்தை டிடிஎச்சில் வெளியிட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்து வருகிறார்களாம்.

இந்த தகவல் தற்போது படக்குழுவிடம் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் யார் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை.