Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கீர்த்தி சுரேஷ், சூர்யா படத்தில் கமிட்டானது இந்த ஒரு காரணத்தால் தானா?

விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சில தகவல்களை இப்போது தான் படக்குழுவினர் ரசிகர்களுக்கு அறிவித்து வருகின்றனர். அண்மையில் விக்னேஷ் சிவன் படத்தை பற்றி முதன்முறையாக ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது இப்படத்தில் நயன்தாரா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், கீர்த்தி சுரேஷ் கமிட்டானது எப்படி என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு விக்னேஷ் சிவன், நயன்தாரா நாயகி என்று கூறப்பட்டது வெறும் வதந்தியே, படத்தின் கதைப்படி கீர்த்தி சுரேஷ் ஒரு மிடில் கிளாஸ் பெண்ணாக நடிக்கிறார். இதுவரை சூர்யாவுடன் நடிக்காத ஒரு நாயகி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற காரணத்தால் தான் அவரை தேர்வு செய்ததாக கூறியுள்ளார்.