Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் காலா படத்தில் பிரபல நடிகருக்கு ஏற்பட்ட விபத்து- பதற்றத்தில் படக்குழு

நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் காலா படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதங்களாக நடந்து வருகிறது. இந்த படத்தில் நான் மகான் அல்ல, நீர்ப்பறவை, சூது கவ்வும் உள்பட பல படங்களில் நடித்த அருள்தாஸ் வில்லனாக நடிக்கிறார்.

இப்பட படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே அமைக்கப்பட்டுள்ள மும்பை தாராவி செட்டில் நடந்து வருகிறது. நேற்று நடந்த படப்பிடிப்பில், ரஜினிகாந்த் முன்னிலையில் அருள்தாஸ் மற்றும் குழுவினர் பேசிக்கொண்டிருப்பது போலவும் ஜீப் ஒன்று வேகமாக வருவது போன்றும் காட்சி படமாக்கப்பட்டது.

அப்போது வேகமாக வந்த ஜீப், அருள்தாஸ் மீது மோதியதில் இடது காலில் ஜீப்பின் டயர் ஏறி இறங்கியது. இதில் அவரது 3 விரல்கள் நசுங்கின. உடனே அவரை படக்குழு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பார்த்த மருத்துவர்கள் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

தற்போது அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது, 3 மாதம் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.